காவல் நிலையத்தை நாடிய 2 காதல் ஜோடிகள்
சேலம்:
சேலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒரே நாளில் இரண்டு காதல் ஜோடிகள் அடைக்கலம்புகுந்தனர். இதில் ஒரு ஜோடிக்கு போலீஸாரே திருமணம் நடத்தி வைத்தனர்.
சேலம் டவுன் சுப்ரமணியம் தெருவில் வசித்து வருபவர் ராமு என்னும் மிராசுதாரர்.அவரது மகன் மோகனசுந்தரம் (22). பி.பி.எம். பட்டதாரி. சேலத்தில் இரண்டு சக்கரவாகனங்கள் நிறுத்தும் இடம் நடத்தி வருகிறார்.
சேலம் டவுனில் கல்லாங்குத்து தெருவில் வசித்து வரும் பிளஸ் டூ படிக்கும்ராஜேஸ்வரிக்கும் ( 19), மோகன சுந்தரத்திற்கும் காதல் மலர்ந்தது. இருவரும் நேரிலும்போனிலும் பேசி காதலை வளர்த்துக் கொண்டனர். 3 வருடங்களாக அவர்கள் காதல்ரகசியமாக வளர்ந்து வந்தது.
இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் ராஜேஸ்வரி வீட்டில் காதலுக்கு எதிர்ப்புவளர்ந்தது. மோகனசுந்தரம் வீட்டில் காதலுக்கு ஆதரவு இருந்தது.
இந்நிலையில் காதலர்கள் இருவரும் பழனி முருகன் கோயிலில் திருமனம் செய்துகொண்டனர். அதன் பின்பு இருவரும் சேலம் டவுன் காவல் நிலையத்தில் உதவி கேட்டுதஞ்சம் புகுந்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் இரு வீட்டாரையும் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்திவருகிறார்.
இதேபோல சேலம் செவ்வாய்ப் பேட்டை வெள்ளிப் பட்டறையில் வேலை செய்யும்நாகராஜ் (22) என்பவரும் அவர் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் ராஜாத்தி (21)என்பவரும் 4 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் இருவர் வீட்டிலும் காதலுக்கு பலத்த எதிர்ப்புஇருந்தது. தங்களை பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என் அஞ்சிய இந்த ஜாடிசேலம் பள்ளப்பட்டிபோலீசில் தஞ்சம் அடைந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு திருமால் இரு வீட்டாரையும் அழைத்து திருமணத்திற்குசம்மதிக்க முயற்சி செய்தார். நாகாாஜ் வீட்டார் காவல் நிலையத்திற்கு வர மறுத்துவிட்டனர்.
காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் போலீசாரே காவல் நிலையத்தில் இருவருக்கும்திருமணம் செய்து வைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications