குண்டு வெடிப்பு: மதானிக்கு ஜாமீன் இல்லை
கோவை:
உடுமலையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மதானியின் ஜாமீன்மனு தள்ளுபடியானது.
கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டையில் கடந்த 97ம் ஆண்டு டிசம்பர் மாதம் சைக்கிள் குண்டு வெடித்தது. வணிக வளாகம்முன் நடந்த இந்த சம்பவத்தில் 3 பேர் இறந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை தனி நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 9 பேர் செப்டம்பர் 4ம் தேதி (இன்று) ஆஜர் செய்யப்பட்டனர். இந்த வழக்கை நீதிபதிதணிகாசலம் வரும் செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மதானியின் ஜாமீன் தள்ளுபடி:
கேரள ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் மதானி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரள ஜனநாயக மக்கள் முன்னணிக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானிகோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அப்துல் நாசர் மதானி தனக்கும், கோவை குண்டு வெடிப்பு வழக்கிற்கும்தொடர்பு இல்லை.
வெறும் தொலைபேசி பேச்சை மட்டுமே வைத்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் தனக்கும் தனதுஆதரவாளர்கள் 9 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வரும் தனிநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தணிகாசலம் உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications