துரோகம் செய்வதா..? 55 வயது "காதலி"யைக் கொன்ற 75 வயது "வாலிபர்"
டெல்லி:
தனக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கருதி தான் காதலித்த பெண்ணைக் கொலை செய்த 75 வயது முதியவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது பற்றிக் கூறப்படுவதாவது:
பஞ்சாப் மாநிலம் அமிர்த்சரஸைச் சேர்ந்தவர் நிரஞ்சன் சிங். 75 வயதான இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்குத் திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், 4 குழந்தைகளுக்குத் தாயான சரண் கவுர் என்ற பெண்ணை, 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார் நிரஞ்சன் சிங். அமிர்தஸரசுக்கு வந்த சரண்கவுருக்கு வீடு வாங்குவதற்காக தனது நிலத்தை விற்றுப் பணம் தந்து உதவினார் நிரஞ்சன் சிங்.
அப்போதே சரண் கவுரையும் அவர் காதலிக்க ஆரம்பித்துவிட்டார். நிரஞ்சன் சிங்குக்கும், சரண் கவுருக்கு இடையே 20 வயது வித்தியாசம். ஆனால், சரண்கவுர் மனதில் நிரஞ்சன் சிங் மீது காதல் ஏதும் இல்லை. ஆனால், அதே பகுதியைச் சேர்ந்த தன்னை விட வயதில் குறைந்த தர்பாரா சிங்கை அவர் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. (?)
பலமுறை காதல் தூது விட்டும் தன் மீது காதல் பார்வையை வீசாத சரண் கவுர் மீது நிரஞ்சன் சிங்குக்கு வருத்தம். இது தர்பாரா சிங்கை சரண் சிங் காதலிப்பதுதெரிந்து கோபமாக மாறியது.
தன்னைக் காதலிக்காமல் வேறு ஒருவரைக் காதலிக்கும் சரண் கவுரைக் கொலை செய்ய முடிவெடுத்தார் நிரஞ்சன் சிங்.
கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி சரண் கவுரைச் சந்தித்து தன்னுடன் வரும்படி நிரஞ்சன் சிங் கூறினார். ஆனால் சரண் கவுர் மறுத்துவிட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த நிரஞ்சன் சிங் தான் கொண்டு சென்ற அரிவாளால் சரண் கவுரின் கழுத்தை வெட்டிக் கொலை செய்தார்.
தலையை அங்கேயே போட்டுவிட்டு, தலையில்லாத உடலை வீட்டுக்கு அருகே புதரில் வீசியிருந்தார் நிரஞ்சன் சிங்.
சரண் கவுரைக் கொலை செய்த குற்றத்துக்காக நிரஞ்சன் சிங்கைப் போலீஸார் கைது செய்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications