ஒலிம்பிக் தொடக்க விழாவில் "கலக்கப் போகும்" இந்திய டான்சர்கள்
மெல்பெர்ன்:
சிட்னியில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்தியடான்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் செப்டம்பர் 15-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள்தொடங்குகின்றன. அக்டோபர் 1-ம் தேதி வரை இப் போட்டிகள் நடைபெற உள்ளன.
செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் தொடக்க நாள் கலை நிகழ்ச்சிகளில் சிட்னியில்வசிக்கும் இந்திய நடனக் கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
சிட்னியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய நடன மையத்தை நடத்தி வரும்ராகவன் நாயருக்கு இந்த அரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தொடக்க நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தஇவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2 நிமிட நேரத்துக்கு நடன நிகழ்ச்சியை நடத்த ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் அனுமதி அளித்துள்ளனர்.
கிடைத்துள்ள குறைந்த நேரமே ஆனாலும், அந்த நேரத்தில் நடனக் குழுவினர் தங்களதுமுழுத் திறமையையும் காட்டி இந்திய நடனக் கலையின் சிறப்பைவெளிக்காட்டுவார்கள்.
அதற்காக, எங்களது நடனக் குழுவிலிருந்து சிறந்த 10 நடனக் கலைஞர்களை மட்டும்தேர்வு செய்து அவர்களுக்குச் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்ராகவன் நாயர்.
இதேபோல் தேவீந்தர் சிங் தாரியா என்பவரது இந்திய நடனக் குழுவினருக்கும்இத்தகைய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவரது குழுவினர் பாங்ரா நடனத்தைஆடிக் காட்டுவார்கள்.
ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாள் கலை நிகழ்ச்சியில் ஆசிய நாடுகளில் உள்ளஅனைத்து முக்கிய நடனங்களும் ஆடிக் காட்டப்படும். இதில் மொத்தம் 70 நடனக்கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த 70 பேரில் தாரியா மற்றும் நாயரின் நடனக் கலைஞர்களும் சேர்ந்து தங்களதுநடனத் திறமையை வெளிக்காட்ட உள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications