கர்நாடகத் தமிழர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது கன்னட அமைப்பு
பெங்களூர்:
ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு ஒரு கன்னட அமைப்பு பகிரங்க எச்சரிக்கைவிடுத்துள்ளது.
கர்நாடகத்தின் சூப்பர் ஸ்டார் டாக்டர் ராஜ்குமார் வீரப்பன் கும்பலால் கடத்தப்பட்டு 37 நாட்கள் ஆகிவிட்டன.வீரப்பன் சரமாரியாக நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருக்கிறான். ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பால் கைதிகள்விடுவிப்பு போன்ற நிபந்தனைகளை நிறைவேற்ற கர்நாடக, தமிழக அரசுகளால் இயலவில்லை.
இதனால் இந்த விஷயத்தில் எந்த முன்னேற்றமும் இன்றி பெரும் தேக்கம் நிலவுகிறது. இதனால் கர்நாடகத்தில்உள்ள ராஜ்குமார் ரசிகர்களும் கன்னட அமைப்புகளும் அமைதி இழக்கத் துவங்கியுள்ளன.
இந் நிலையில் திங்கள்கிழமை நிருபர்களை சந்தித்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் ஜனகரேவெங்கட்ராமையா கூறுகையில், டாக்டர் ராஜ்குமார் கன்னடர்களின் சொத்து. அவரை கள்ளன் வீரப்பன் கடத்திக்கொண்டுபோய் 36 நாட்கள் ஆகிவிட்டன. இதுவரை மீட்கவில்லை.
ராஜ்குமார் கடத்தலுக்கு முக்கியக் காரணம் தமிழர்களே. வீரப்பனுக்கு திருவள்ளுவர் சிலை குறித்துத் தெரியாது.பெங்களூர் தமிழ்ச் சங்கம் கூறிய பிறகே தெரியும். திருவள்ளுவர் சிலை பெங்களூர் மாநகராட்சிக்கு சொந்தமானஇடத்தில் அமைந்துள்ளது.
சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வஞருக்கு சிலை வேண்டாம். அதே போல பெங்களூரிலும் திருவள்ளுவர்சிலையைத் திறக்க அனுமதிக்கக் கூடாது.
கர்நாடகத்தில் 2வது ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்கச் சொல்கிறான் வீரப்பன். தமிழகத்தில் 4 லட்சம்கன்னடர்கள் வசிக்கின்றனர். இதனால் தமிழகத்தில் கன்னடத்ததை இரண்டாவது ஆட்சி மொழியாக அறிவிக்கமுடியுமா? இதற்கு கருணாநிதிக்கு மனம் வருமா?
காவிரிக் கலவரத்தில் கூட கன்னடர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். சேலம், தருமபுரி, ஈரோடு, கோயம்புத்தூர்மாவட்டங்களில் கன்னடர்கள் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு 1 ரூபாய் கூட நஷ்டஈடு வழங்கவில்லை.
இந்த முழுச் சம்பவங்களுக்கும் பெங்களூர்த் தமிழ்ச் சங்கமும், தமிழர் அமைப்புகளும், தமிழர்களும் தான் காரணம்.இவர்கள் கூறுவதைக் கேட்டு கருணாநிதி, வீரப்பன், கோபால் மூவரும் சேர்ந்து ராஜ்குமாரைக் கடத்திவிட்டுநாடகமாடிக் கொண்டு உள்ளனர்.
பெங்களூரில் உள்ள தமிழர்கள் எங்களுக்கு திருவள்ளுவர் சிலை வேண்டாம் என்று கூற வேண்டும்.இல்லையென்றால் நடப்பதே வேறு.
கோலார் எம்.எல்.ஏ. பக்தவச்சலமும், சாந்தி நகர் எம்.எல்.ஏ. முனிசாமியும் என்றாவது கன்னடத்தில்பேசியிருக்கிறார்களா?இவர்களும் வீரப்பனுக்கு ஒப்பானவர்கள்.
இவ்வாறு வெங்கட்ராமையா கூறினார்.
இவரது கருத்து தமிழர்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications