For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோபாலை எம்.பியாக்கலாம்.. ஹெக்டே

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

வீரப்பனிடம் தூது சென்று கொண்டிருக்கும் நக்கீரன் கோபாலை, நான் பதவியில்இருந்தால் ராஜ்யசபா எம்.பி. ஆக்குவேன் என்று முன்னாள் கர்நாடக முதல்வர்ராமகிருஷ்ண ஹெக்டே கூறியுள்ளார்.

15 வருடங்களுக்கு முன்பு வீரப்பனை சமாளிததவர் ஹெக்டே. வீரப்பன் குறித்தும்அவனை எப்படி சமாளித்தார் என்பது குறித்தும், ஹெக்டே அளித்த சிறப்புப் பேட்டி:

வீரப்பன் பிரச்சனையில் அரசு தூதர் கோபால் சரியாக பயன்படுத்தப்படவில்லை . நான்1985- 86ல் முதல்வராக இருந்தபோது வீரப்பன் முதன் முதலாக கைது செய்யப்பட்டுசாம்ராஜ் நகர் சிறையில் அடைக்கப்பட்டான்.

அப்போது சார்க் உச்சி மாநாடு நடக்கவிருந்ததால் காவல் துறை அதிகாரிகள் அந்தமாநாட்டுக்கு வரும் முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டனர். அதைப் பயன்படுத்தி வீரப்பன் தப்பிச் சென்று விட்டான்.அவன் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருக்கக் கூடும் என சந்தேகிக்கிறேன்.அப்போது அவனிடம் ஏராளமான பணம் இருந்தது.

விடுதலைப்புலி அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின், பயிற்சி அளிக்கவீரப்பன் உள்ள காட்டை பிரபாகரன் பயன்படுத்திக் கொண்டுள்ளார். இதற்காக,வீரப்பனுடன் கூட்டு சேர்ந்து இளைஞர்களுக்கு காட்டில் கொரில்லா பயிற்சி அளித்துவருகிறார்.

அவரிடம் இருக்கும் பலரும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள். வீரப்பனுக்குஅரசியல் ஆதரவும் இருக்கக் கூடும். ஆண்டுக்கு 2 மில்லியன் பணத்தை வீரப்பன்சம்பாதிக்கிறான்.

வீரப்பனுக்கு காட்டுக்கு அருகில் உள்ள கிராம மக்களின் ஆதரவு உள்ளது. அங்குவன்னிய இனத்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் அவனைஆதரிக்கிறார்கள். வீரப்பனும் அவ்வப்போது அவர்களுக்கு சிறு அளவில் பண உதவிஅளித்து ராபின் ஹுட் போல் காண்பித்துக் கொள்கிறான். ஆனால், அவர்களுக்குஉதவுவது வீரப்பனின் சுய லாபத்துக்காகத்தான்.

வீரப்பனுக்கு கொள்கை என ஒன்றும் கிடையாது. ஆனால் இப்போது அவன்அரசியலுக்கு வர முயற்சிப்பது போல் தோன்றுகிறது.

கர்நாடக அரசு வீரப்பன் கோரிக்கைகளுக்கு பணிந்தது பெரிய தவறு. ராஜ்குமார்கடத்தப்பட்டது தமிழகப் பகுதியில்தான். வீரப்பன் அதிகமாக உலாவுவதும் தமிழகப்பகுதியில்தான். எனவே தமிழகமே முழுப் பொறுப்பேற்று ராஜ்குமாரை விடுவிக்கமுயற்சிக்க வேண்டும். அவர்களுக்கு கர்நாடகம் முழு ஒத்துழைப்பும் கொடுக்கவேண்டும்.

தடா கைதிகள் விடுதலை குறித்து, உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியானதே. அதில் எந்தவிதமான தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலின்போது பயணிகளை விடுவிக்க மூன்றுமுஸ்லீம் தீவிரவாதிகளுடன் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆப்கானிஸ்தான்சென்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் முப்தி முகம்மது சயீத்தின் மகளை மீட்க மத்தியஅரசுதீவிரவாதிகளை விடுவித்தது. இதெல்லாம் தவறான முன்னுதாரணங்கள். இப்போதுவீரப்பனும் தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்லி கேட்கிறான் இதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

இந்தப் பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.மாநில அரசு கேட்டுக் கொண்டால் மட்டுமே மத்திய அரசு இந்தப் பிரச்சனையில்தலிையட முடியும்.

காட்டுப் பகுதி முழுவதும் அதிரடிப்படையினர் சுற்றி வளைக்க வேண்டும். காடுமுழுவதிலும் நன்றாகத் தேட வேண்டும். எந்தவித இடைஞ்சலும் இல்லாவிட்டால்வீரப்பனைச் சுலபமாக பிடிக்கலாம்.

நான் முதல்வராக இருந்தால் அரசு தூதர் கோபாலை சிறப்பாக பயன்படுத்தியிருப்பேன். பல விதமான திட்டங்களையும் அவரைக் கொண்டுசெயல்படுத்தியிருப்பேன்.

கோபால் தேச செய்வதாகக் கூறி அவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு சிபாரிசுசெய்திருப்பேன். இதன் மூலம் அவரை உபயோகப்படுத்தி வீரப்பனை பிடிக்கும்முயற்சியிலும் ஈடுபட்டிருப்பேன். இஸ்ரேல் கமாண்டோவின் உதவியையும்கேட்டிருப்பேன் என்றார் ஹெக்டே.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X