For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளைக் காதலித்த இளைஞனை கடத்தி, மொட்டையடித்து, மனநோயாளியாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி

By Staff
Google Oneindia Tamil News

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் பேசிக் கொள்ளும் விஷயம் அதிரவைக்கிறது.

ஐ.எஸ்.ஐ. அதிகாரி ஒருவரின் மகளைக் காதலித்த வாலிபரின் தலை மொட்டைஅடிக்கப்பட்டு, மனநோயாளி என்று ஏர்வாடியில் உள்ள மன நேயாளிகள்காப்பகத்தில் சேர்த்துவிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

சிவகங்கை மாவட்ட இடது கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் அர்சுணன் இதுதொடர்பாக முதல் அமைச்சர், உள்துறைச் செயலாளர், மத்திய அரசுப் பணியாளர்நலத்துறை செயலாளர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவின் விவரம்:

மானாமதுரை அருகே உள்ள குருதன் குளத்தைச் சேர்ந்த வீரணன் மகன் முருகன்.சென்னையில் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை இயக்குனர்கலைவாணனும் உறவினர்கள். குருதன் குளத்தில் இருவரின் வீடுகளும் அருகருகேஉள்ளன.

சென்னையில் கலைவாணன் ஐ.ஏ.எஸ்சின் மகளும் முருகனும் ஒருவரையொருவர்விரும்பியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கலைவாணன் அடியாட்கள்மூலம் முருகனை சென்னையில் இருந்து ரயிலில் குருதன் குளத்துக்குவலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளார்.

கடந்த மாதம் 28ம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்நின்றபோது முருகன் அந்த அடியாட்களின் கும்பலிடமிருந்து தப்பி ஓடினார். ஆனால்,அவரை விடாமல் விரட்டிப் பிடித்த இந்த கூலிக் கும்பல் ஒரு டாக்சியில் வைத்துமுருகனை குருதன் குளத்துக்குக் கடத்திக் கொண்டு வந்தனர்.

அன்று இரவு முழுவதும் முருகனை அவரது தந்தை வீரணன் முன்னிலையில் வைத்துஅடித்துக் கொடுமைப்படுத்தினர். இதில் சுய நினைவை இழந்தார் முருகன்.

மயங்கிக் கிடந்த முருகனை பின்னர் கலைவாணனின் வீட்டுக்குள் இழுத்துச் சென்றகூலிக் கும்பல் முருகனுக்கு மொட்டை அடித்தனர். அவரது புருவத்தையும் மழித்தனர்.இரவு முழுவதும் இந்த சித்திரவதை தொடர்ந்தது.

மறுநாள் காலை முருகனின் தந்தை அங்கிருந்து தப்பிச் சென்று சிவங்கை சிப்காட்காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சாதகமான அந்தகாவல் நிலையம் அப்பாவி வீரணன் கொடுத்த புகாரை பதிவு செய்யவிலலை.

ஆனால், அதற்குள் கலைவாணனின் அடியாட்கள் முருகனை ஏர்வாடிக்குக் கொண்டுசென்றனர். முருகனின் பெயரை மாயாண்டி என்று மாற்றிச் சொல்லி, அவர் ஒரு மனநோயாளி என்றும் கூறி அந்த இல்லத்திலேயே சேர்த்துவிட்டனர்.

முருகனை ஏர்வாடி மன நோயாளிகள் இல்லத்தில் சேர்க்கும் இந்தக் கொடுமைக்குராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை அதிகாரியும்இந்தக் கும்பலுக்கு உதவி செய்துள்ளார். காரணம் இந்தத் துறையின் இயக்குனர்கலைவாணன் தான்.

வீரணன் சிப்காட் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து கலைவாணன்குடும்பத்தினரும் வீரணன் குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார்கொடுத்துள்ளனர்.

அத்தோடு முருகனை ஏர்வாடியில் இருந்து அழைத்து வந்து மானாமதுரையில் உள்ளதனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்துவிட்டுள்ளனர்.

அரசுப் பொறுப்பில் மிக உயர்ந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரி கலைவாணன் இந்த கொடுமையான மனித மீறலைச் செய்துள்ளார்.

அவர் மீது விசாரணை நடத்தி சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று மனுவில் கூறப்பட்டுளளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X