For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நரம்பு மண்டலத்தில் பிரச்சனை

By Staff
Google Oneindia Tamil News

மின்சாரத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய இடம் தொலைத் தொடர்பு.

ஹை-டெக் தொழில்நிறுவனங்கள் பெரிய நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளில் தான் அதிக அளவில் தொடங்கப்படுகின்றன. சர்வதேசஅளவில் இது தான் நிலை. இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கிய காரணங்கள், நகரங்களில் நிலவும் இடப் பற்றாக்குறையும் ஊரகப்பகுதிகளில் கிடைக்கும் விலை குறைவான நிலமும் தான்.

இது இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழகத்துக்கும் பொருந்தும். சென்னையின் தெற்குப் பகுதியில் பல ஹை-டெக் நிறுவனங்கள் முளைத்துவருவதற்கு இது தான் காரணம். இப்படி ஊருக்கு வெளியே இப்படிப்பட்ட நிறுவனங்கள் தொடங்கப்படுமபோது, அந்த நிறுவனங்கள்வெளி உலகுடன் தொடர்பு கொள்ள அங்கு நல்ல தகவல் தொடர்பு கட்டமைப்பு இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

இந்தியாவைப் பொறுத்தவரை தொலைத் தொடர்புத்துறை முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இதில் தமிழகஅரசு பெரிய அளவில் ஏதும் செய்துவிட முடியாது தான். ஆனால், மத்திய அரசிடம் கோரிக்கையை வைத்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்குஎன்ன தேவையோ அதை வாங்கித் தர வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. சந்தேகமேயில்லை.

இதில் தமிழக அரசு முழு அளவில் வெற்றி பெறவில்லை என்பது தான் சோகம். சாப்ட்வேர் நிறுவனங்களின் நரம்பு மண்டலமேஹை-பேண்ட் விட்த் கொண்ட அதிவேக தகவல் தொடர்பு இணைப்புகள் தான். இந்தியாவில் இதுவரை வி.எஸ்.என்.எல். தான் இந்தஇணைப்புகளை வழங்கி வருகிறது. அரசு நிறுவனமாக இருந்தாலும் இதன் செயல்பாடு பிரமாதமாகவே உள்ளது.

ஆனால், வி.எஸ்.என்.எல்லின் இந்த அதிவேக தகவல் தொடர்பு இணைப்பில் ஒரு பெரிய பிரச்சனை. வி.எஸ்.என்.எல். மத்தியஇணைப்பகத்தில் இருந்து லோக்கல் தொலைத் தொடர்பு நிலையம் இடையிலான தகவல் தொடர்பு நன்றாகவே உள்ளது.

ஆனால், இந்த உள்ளூர் நிலையத்திலிருந்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்குத் தரப்படும் லோக்கல் லூப் லைன்களில் எப்போதுபார்த்தாலும் பிரச்சனை தான். இந்த லோக்கல் லூப் இணைப்பு பாதி நேரம் படுத்துக் கொள்கிறது என்ற புகார் இருந்து வருகிறது.

இதனால், கையில் ஹை-பேண்ட் வித்ட் லைன் இருந்தாலும் டேட்டாவை அனுப்ப முடியாமல் சாப்ட்வேர் நிறுவனங்கள் தடுமாறவேண்டிய நிலை. இது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்பதை தமிழக அரசு புரிந்து வைத்திருப்பது தான மிக முக்கியமான,மகிழ்ச்சியான விஷயம்.

இந்தப் பிரச்சனையைத் தீர்க்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது தமிழகம். அதில் ஒன்று தான் வோர்ல்ட் டெல் நிறுவனத்துடன்செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம்.

ராஜீவ் காந்தியின் கனவான கம்ப்யூட்டர் இந்தியாவை நிறைவேற்றியவர்களில் முக்கியமானவரான சாம் பிட்ரோடா தான்இப்போது வோர்ல்ட் டெல் நிறுவனத்தின முக்கிய நபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இந்தியாவையும்,தமிழகத்தையும் நன்றாகவே தெரியும். நமக்கு என்ன தேவை என்பதும் அவருக்குத் தெரியும். எனவே, வோர்ல்ட் டெல்நிறுவனத்துடனான தமிழகத்தின் ஒப்பந்தம் பல வகைகளில் சாப்ட்வேர் வளர்ச்சிக்கு உதவும் என்பதில் சந்தேகமேயில்லை.

இது தவிர மத்திய அரசு நிறுவனங்களான வி.எஸ்.என்.எல்., தொலைத் தொடர்புத்துறை ஆகியவற்றுக்கு என்ன உதவிகள்வேண்டுமானாலும் செய்யத் தயார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. உங்களுக்கு நிலம் வேண்டுமா, மின்சாரம் வேண்டுமா, என்னவேண்டும், கேளுங்கள். செய்து தருகிறோம் என்று அறிவித்துள்ளது தமிழகம்.

இது சாப்ட்வேருக்கு தமிழகம் தந்து வரும் முக்கியத்துவத்தையும், தகவல் தொடர்பு பிரச்சனையால் தமிழக ஐ.டி. நிறுவனங்கள்பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு காட்டி வரும் அக்கரையையுமே காட்டுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X