For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ. 1.5 கோடியுடன் ஓடிப் போனவர் கேரளாவில் கைது

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

சிதம்பரத்தில் தங்க நகை சேமிப்பு திட்டத்தில் கடந்த ஆண்டு ஒண்ணரை கோடி ரூபாய்மோசடி செய்து தலைமறைவான நகை வியாபாரி கேரளாவில் கைதானார். அவரதுமருமகன்கள் உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம் தெற்கு தெருவில் பாலாஜி பைனான்ஸ் மற்றும் நகைக்கடை வைத்திருந்தவர்சந்திரசேகரன் (62). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பொதுமக்களைக் கவரும்வகையில் நவரத்தினமாலா, சுபமங்களா போன்ற தங்கை நகை சேமிப்பு திட்டங்களைநடத்தி வந்தார்.

ஒவ்வொரு சேமிப்பு திட்டத்திலும் 3000 பேரை உறுப்பினராக சேரத்துஅவர்களிடமிருந்து மாதம் 150 ரூபாய் வீதம் 30 மாதங்களுக்கு தவணை வாங்கி,அதற்காக கவர்ச்சிகரமான இலவச பரிசுகளை வழங்குவதாக அறிவித்தார். அவருக்குஉதவியாக மருமகன்களையும் சேரத்துக் கொண்டார்.

தனது மூன்று மகள்களுக்கும் சிறப்பாக திருமணம் செய்து வைத்துள்ளார் சந்திரசேகரன்.தன்னுடைய மருமகன்களில் ஒருவரான பிரபாகரனுக்கு ஒரு கிலோ தங்கமும், பத்துகிலோ வெள்ளியும், ஒரு காரும் சீதனமாக கொடுத்துள்ளார். இந்த நிலையில் முப்பதுமாதம் நெருங்கியதும் உறுப்பினர்களுக்கு பணம் தங்க நகைகள் கொடுக்கமுடியாததால் தலைமறைவாகி விட்டார்.

இது பற்றி ஆயிரக்கணக்கான புகார்கள் போலீசாருக்கு வர, போலீசார் களத்தில்இறங்கினார்கள். தீவிரமாக தேடியதில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் சந்திரசேகரன்மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது.

போலீசார் விரைந்து சென்று சந்திரசேகரனை பிடித்து கடலூர் கொண்டுவந்தனர்.அவரிடம் விசாரிக்க, சிதம்பரத்தில் போலி சீட்டுக் கம்பெனிகளில் பணத்தைப் போட்டுஏமாந்து விட்டேன் என்றாராம்.

இது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். தலைமறைவாக இருக்கும்சந்திரசேகரனின் மருகமன்களையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

பொது மக்களிடமிருந்து நகைச்சீட்டு பணமாக, சந்திரசேகர் வசூலித்த ஒண்ணரைகோடிரூாபாய் பணம் பற்றியும் போலீசார் தனியாக விசாரித்து வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X