இன்று பெங்களூர் வருகிறார் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பேசுவதற்காக தமிழக முதல்வர் கருணாநிதிவெள்ளிக்கிழமை பெங்களூர் வருகிறார்.

நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 40 நாட்கள் ஆகின்றன. அவரை மீட்டு வருவதற்காக3-வது முறையாக காட்டுக்குச் சென்ற நக்கீரன் கோபால், வெறும் கையுடன் திரும்பிவந்துள்ளார்.

5 தமிழ்த் தீவிரவாதிகளையும், கர்நாடக சிறையில் உள்ள 121 கைதிகளையும்விடுவித்து விட்டு ராஜ்குமாரை கூட்டிச் செல்லுங்கள் என்று சந்தனக் கடத்தல் வீரப்பன்நிர்தாட்சன்யமாக கூறி விட்டான்.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு நடிகர் ரஜினிகாந்த்தும், நக்கீரன் கோபாலும்பெங்களூர் வந்து கர்நாடக முதல்வரையும், ராஜ்குமார் குடும்பத்திரையும் சந்தித்தனர்.இதேபோல, வெள்ளிக்கிழமை தான் பெங்களூர் சென்று கிருஷ்ணாவைச்சந்திக்கவுள்ளதாக சென்னையில் கருணாநிதி தெரிவித்தார்.

அதன்படி கருணாநிதி பெங்களூர் வருகிறார். தமிழக முதல்வர் கருணாநிதியுடன்பேசிய பிறகு நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்றுமுடிவு செய்யப்படும் என கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

பெங்களூரில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டியில், தமிழக முதல்வருடன் பேச்சுநடத்தவுள்ளேன். அதன் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவுசெய்யப்படும்.

தடா கைதிகள் விடுதலையை எதிர்த்து மைசூர் அப்துல் கரீம் தொடர்ந்த வழக்கின்விசாரணையை விரைவாக நடத்துமாறு சுப்ரீம் கோர்ட்டில் கோரியிருந்தோம். அதைகோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தக் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துவிட்டது என்று பத்திரிகைகளில் தவறாக செய்தி வெளியாகிருந்தது என்றார் கிருஷ்ணா.

என்ன பேசினார் ரஜினி?

இதற்கிடையே, புதன்கிழமை பெங்களூர் வந்திருந்த நடிகர் ரஜினி காந்த், கர்நாடகமுதல்வர் கிருஷ்ணாவுடன் என்ன பேசினார் என்பது குறித்து தெரிவிக்க முடியாதுஎன்று கர்நாடக செய்தித்துறை அமைச்சர் சந்திரசேகர் மறுத்து விட்டார்.

இருவரும் தனியே பேசிக் கொண்டனர். அப்போது நான் இல்லை. எனவே என்னபேசினார்கள் என்பது குறித்துத் தெரியாது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+