சீனாவில் வெடிகுண்டு லாரி வெடித்து 100 பேர் பலி
பெய்ஜிங்:
சீனாவில் வெடிகுண்டுகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி மக்கள் வசிக்கும் பகுதியில் செல்லும்போது வெடித்துச் சிதறியது. இதில்100க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.
ஜின்ஜியாங் உய்கூர் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது.
இந்த வெடிகுண்டுகள் அழிப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த லாரி உருமி என்ற இடத்தில்சென்று கொண்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த 100 பேரின் உடல்கள்சிதறின.
பல வீடுகளும் இடிந்து விழுந்தன. 20 வாகனங்களும் வெடித்துச் சிதறி நொறுங்கின.
இந்த வெடிகுண்டுகள் திடீரென வெடித்ததற்கான காரணம் தெரியவில்லை என சீனாவின் செய்தி நிறுவனமான ஷின்குவாதெரிவிக்கிறது.
சீனாவின் இந்தப் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதம் மெல்ல மெல்ல வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தீவிரமான கம்யூனிஷகொள்கைகளும், அடக்குமுறைகளும் நிறைந்திருந்தாலும் அங்கும் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது.
இந்தத் தீவிரவாதக் கும்பல்களில் ஒன்று தான் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்திருக்க வேண்டும் என்றும் சந்தேகம் நிலவுகிறது.
ஜின்ஜியாங் மாகாணத்தை ஒட்டி தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய முன்னாள் சோவியத் நாடுகள் உள்ளன.இந்த நாடுகளிலும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன.
இந்த தீவிரவாதிகளும் ஆப்கானிஸ்தானை ஆளும்தலிபான் தீவிரவாதிகளும் சேர்ந்து ஜின்ஜியாங் மாகாணத்துக்கு ஆயுதங்களைக் கடத்தி வந்து சீனாவின் இஸ்லாமியதீவிரவாதிகளுக்கு உதவி வருவதாக சீனா கூறி வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications