சேலம், நாமக்கல்லில் வேகமாகப் பரவிவரும் எய்ட்ஸ்
சேலம்:
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் எய்ட்ஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு மூலம் தேசிய எய்ட்ஸ்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது என திட்ட இயக்குநர் பிரசாத் ராவ் தெரிவித்தார்.
சேலத்தில் நடந்த எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய மாநாட்டில் கலந்து கொண்டு திட்ட இயக்குநர் பிரசாத் ராவ் பேசியதாவது:
கடந்த 1987ம் ஆண்டு முதல் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. 87ம் ஆண்டு மகாராஷ்டிரா,தமிழ்நாடு, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே எய்ட்ஸ் நோய் இருப்பதாக அறியப்பட்டது.
இதனைக் கட்டுப்படுத்த 97ம் ஆண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பு ரூ. 250 கோடி ரூபாய் நிதியுதவிஅளித்துள்ளது.
தமிழகத்தில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் எய்ட்ஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின்சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் 189 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 18 பேர் இறந்து விட்டனர்.
எனவே இந்த மாவட்டங்களில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி விடக் கூடாது. அவர்களை அரவணைத்துச் செல்லும் பண்பு மக்களிடம் வேண்டும். எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களிடம்பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார் பிரசாத் யாதவ்.


Click it and Unblock the Notifications
