For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆங்கிலத்தில் படித்தால் அறிவு கூடும் என்கிறார் பழனிவேல் ராஜன்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

ஆங்கிலம் படித்தால்தான் மாணவர்களுக்கு ஆழ்ந்த அறிவும், வெளிநாட்டில்வேலையும் கிடைக்கும் என தமிழக சட்டசபை சபாநயகர் பழனிவேல் ராஜன்தெரிவித்தார்.

ஈரோட்டில் அம்மன் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த கட்டடத் துவக்க விழாவில்தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் பழனிவேல்ராஜன் பேசியதாவது:

தமிழ் படித்தால் மட்டுமே உயர முடியும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்தமிழ்க்குடிமகன் கூறி வரும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. இப்போது ஆங்கிலம்எல்லாவற்றிற்கும் அவசியமாகி வருகிறது. கம்ப்யூட்டர் கல்வி ஆங்கிலத்தில் இருந்தால்தான் உலகம் முழுவதும் சென்று பணியாற்ற முடியும்.

ஜெர்மன் நாட்டில் நமது நாட்டின் சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் 20 ஆயிரம் பேர்தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்தில் 10 ஆயிரம் பேர்தேவைப்படுகின்றனர். அமெரிக்காவில் நமது நாட்டின் சாஃப்ட் வர்இன்ஜினியர்களின் தேவை இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இவர்கள் தமிழை மட்டும் கற்றாலோ, தாய்மொழியில் இந்தப் பாடங்களை தெரிந்துகொண்டாலோ தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல முடியாது.

தமிழக முதல்வர், கல்லூரிகளில் தகவல் தொழில்நுட்பத் துறையின் மாணவர்களின்எண்ணிக்கையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

ஏற்கனவே கல்லூரிகளில் 22 ஆயிரம் மாணவர்கள் கம்ப்யூட்டர் படிக்க இடம் உள்ளது.ஆனால் புதிதாக 17 ஆயிரம் பேர் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி படிக்கத்தேர்வு செய்ய அனுமதி கிடைத்துள்ளது.

இவர்கள் ஆங்கிலத்தில் படித்தால் தான் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். எனவே,கம்ப்யூட்டர் கல்வியைப் பொறுத்தவரை ஆங்கிலம் கட்டாயம் தேவை. நான் இவ்வாறுபேசுவதால் தமிழுக்கு எதிரி அல்ல.

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது என இந்து முன்னணி கூறிவருகிறது. ஆனால், இதில் எனக்கு உடன்பாடில்லை. கோயில்களில் தமிழில் அர்ச்சனைசெய்வதில் எவ்வித தவறும் இல்லை என்று பழனிவேல் ராஜன் பேசினார்.

விழாவில் கல்லூரியின் தாளாளர் ஜெயலட்சுமி, எம்.எல்.ஏ., வெங்கிடு ஆகியோர்கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X