அஸ்ஸாம் மாணவர்களின் எண்ணெய் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
கவுகாத்தி:
அஸ்ஸாம் மாநிலத்தில் பெட்ரோலிய உற்பத்தியை நிறுத்த அம் மாநில மாணவர் அமைப்பினர் மேற்கொண்ட போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அஸ்ஸாமில் உள்ளது அரசுத் துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனம். அஸ்ஸாம் மாநிலத்தில் பெட்ரோலியம் உற்பத்தி செய்து அவற்றை நாட்டின்மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வது இந் நிறுவனத்தின் பணி.
இந் நிறுவனத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 300 இளைஞர்களை பணியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி120 மணி நேர போராட்டத்துக்கு அனைத்து அஸ்ஸாம் இளைஞர்கள் சங்கம் அழைப்பு விடுத்தது.
பெட்ரோலிய உற்பத்திக்கு தடை விதிப்பது, பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தடுத்து நிறுத்துவது என்று முடிவு செய்து,திங்கள்கிழமை காலை முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில், மாணவர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆயில் இந்திய நிறுவன அதிகாரிகள் பேச்சு நடத்தினர். மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில்மாணவர்களுடைய கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து தாங்கள் தொடங்கிய போராட்டத்தை திங்கள்கிழமை மாலை முதல் வாபஸ் பெற்றுக் கொள்வதாக மாணவர்கள் அறிவித்தனர்.
நாட்டின் மொத்த குரூட் ஆயில் உற்பத்தியில் கணிசமான அளவு அஸ்ஸாம் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின்போராட்டத்தால் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் கவலைப்பட்டனர்.
இப்போது மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்திக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றுஅதிகாரிகள் தெரிவித்தனர்.ஐ.ஏ.என்.எஸ்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications