ஆசிரியரை எதிர்த்து பார்வையற்ற மாணவர்கள் உண்ணாவிரதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எப்போதும் சமநிலையிலில் இருத்தலே வாழ்வின் வெற்றியின் ரகசியம் என்று இதுவரை பார்த்தோம். இந்தச் சமநிலையை எந்தப் புத்தகத்தில் படித்துத்தெரிந்து கொள்ள முடியும்? எந்தப் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் இந்தச் சமநிலை போதிக்கப்படுகிறது? எப்படிக் கற்றுக் கொள்வது என்றஅர்ச்சுனன் கேள்விக்கு, சாதுக்களிடம் போய்ப்படி என்கிறார் கண்ணன்.

அர்ச்சுனா! பணிந்து கேட்டும் பணிவிடை புரிந்தும் நீ இதை அறிந்து கொள்க. உண்மையை உணர்ந்த ஞானிகள் உனக்கு இந்த ஞானத்தைஉபதேசிப்பார்கள்! என்கிறார் பகவான்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று ஒரு பழமொழி உண்டு. இது நம் கல்விக்குப் பொருந்துவது போல் வேறு எதற்கும் பொருந்துமா என்றுதெரியவில்லை.

பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களால் உருவாக்கப்படும் நம் இளைஞர்கள், வாழக்கைப் போராட்டத்தில் ஈடுகொடுக்க முடியாமல் படுகிற பாடு....அப்பப்பா...!

அதனால்தான் நிறை ஞானத்தை புத்தகங்களில் தேடாதே ... ஞானியிடம் பாடம்படி, ஞானியைப் படி என்று காட்டுகிறான் கண்ணன்.

சட்டம் படிக்கிறோம் என்ற ஆங்கில மேலாண்மையுடன் இருந்த நரேந்திரனுடைய கல்வி அறிவு, பள்ளிக்கூடத்தின் படி மிதிக்காத கிராமத்துக் கிழவனின்பெரு ஞானத்திற்கு முன்பு மண்டியிட்டது. வங்காளத்தில் நிகழ்ந்த வரலாறு...

பகவான் ராமகிருஷ்ணர் விவேகானந்தரை அழைத்து ஒரு முறை கேட்டார்....

நரேன்.. நீ ஒரு ஈயாகப் பிறந்து, ஒரு கிண்ணம் நிறைய அமிர்தம் இருந்தால் எப்படி உண்பாய்?

என் ஆறு கால்களாலும் கிண்ணத்தின் விளிம்பை எச்சரிக்கையாகப் பிடித்துக் கொண்டு, வயிறு முட்ட அமிர்தத்தை உண்ணுவேன்! பதில் தந்தார் நரேந்திரர்.

ஏன்? ஆறுகால்களாலும் எச்சரிக்கையாகப் பிடித்துக் கொண்டு என்கிறாய்?

உள்ளே விழுந்தால் மரணம் வந்துவிடுமே! என்கிறாய் விவேகானந்தர்.

கலகல என்று சிரித்த குருதேவர். அதுதான் அமிர்தமாயிற்றே! முதல் துளி உள்ளே போனதும் மரணம் வராதே .. விழுந்து புரண்டாலும் ஆபத்து இல்லையே.. என்று விளக்கம் கூறினார்.

அறிவு வேறு, அனுபவம் வேறு.

ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி. தோட்டக் கலை இயலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பண்ணை ஒன்றின் இயக்குனராகப் பதவி ஏற்றார்.

கம்பீரமாக கைவீசியபடி தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தார். ஐம்பதாண்டு கால அனுபவமிக்க தோட்டப் பணியாளர் கைகளைக் கட்டியபடி பின்னால் வந்தார்.

அடர்ந்து கிடந்த குட்டை மரத்தைச் சுட்டிக்காட்டி,இதில் இலைகளைஎல்லாம் தரிச்சு விடணும் என்று உத்தரவு போட்டார்.

சரிங்க ... என்றார் பண்ணை ஊழியர்.

நல்லா இலை எல்லாம் வெட்டி விட்டாத்தான் மாங்காய் நிறைய காய்க்கும் தெரியுமா? என்றார் அதிகாரி.

எவ்வளவு வெட்டினாலும் மாங்காய் காய்க்காதுங்கோ பண்ணை ஊழியர் பணிவாக பதில் சொன்னார்.

ஏன்யா காய்க்காது.. ஏன்யா மாங்காய் காய்க்காது? சீறி விழுந்தார் முதுகலைப் பட்டதாரி.

அது இலுப்பை மரங்க. அதில மாங்காய் காய்க்காது என்றார் அனுபவஸ்தர்.

அறிவு வேறு... அனுபவம் வேறு.

புத்தகங்கைளப் படித்துவிட்டு யோகம் செய்வது.. புத்தகங்களைப் படித்துவிட்டு சித்த வைத்தியம் செய்வது ... மருந்து தயாரிப்பது... இவை யாவும் அரைவேக்காட்டுத்தனம். ஏன்.. இன்னும் அழுத்தமாகச் சொன்னால் .. ஆபத்தான மடத்தனம்

என் சிங்கப்பூர் நண்பர் ஒருவர், தொலைக் காட்சியில் தாம் கேட்ட கஷாயத்தைத் தாமே வைத்துக் குடித்துவிட்டு நாற்பத்தொரு நாள் ஜுரம் வந்துகஷ்டப்பட்டார். ஜன்னி வந்து பிழைத்ததே பெரும்பாடு.

எந்த விஷயத்திலும் வழிகாட்ட நல்ல குரு தேவை. குருவின் சகவாசம், சந்நதி வாசம், வழி காட்டுதல் சாதகனுக்கு அவசியம் தேவை. எனவே சமநிலைஎன்கிற அனுபவம் பெற அந் நிலை எய்திய மகான்ள், குருமார்கள் தொடர்பு தேவை.

எனக்கே எல்லாம் தெரியும்... எனக்கு எதற்கு ஒரு குரு? என்று கேட்கிறீர்களா? விடை சொல்கிறேன்....!

(தொடரும்...)

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற