பயங்கரவாத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாது பாக்.?
நியூயார்க்:
சர்வதேச பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கையெழுத்திட பாகிஸ்தான் உடன்படாதுஎன்று கூறப்படுகிறது.
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதுடன் அதற்கு நிதியுதவியும் செய்து வருகிறதுபாகிஸ்தான் என்று ஏற்கனவே இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாகசமீபத்தில் நடந்த மில்லனியம் மாநாட்டிலும் பிரதமர் வாஜ்பாய் நேரடியாகவே குற்றம்சாட்டிப் பேசினார்.
இந்த நிலையில், தற்போது நியூயார்க்கிலுள்ள பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர்முஷாரப், பயங்கரவாத தடுப்பு மற்றும் நிதியுதவித் தடுப்பு ஒப்பந்தத்தில்,கையெழுத்திட மாட்டார் என்று தெரிகிறது.
இதுகுறித்து ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி கமலேஷ் சர்மாகூறுகையில், பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என நான்நினைக்கவில்லை. ஒப்பந்தத்தை அவர்கள் ஏற்பதாக இருந்தால் அது எப்போதோதெரிந்திருக்கும் என்றார்.
பிரதமர் வாஜ்பாய் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை முஷாரப் அதில் கையெழுத்திடவில்லை.
சர்மா தொடர்ந்து கூறுகையில், அரசியல் தைரியம் இல்லாததாலேயே சில நாடுகள்இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கின்றன என்றார்.
இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறுகையில், இந்தஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் நாடுகளில் இலங்கையும் ஒன்று என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications