போலி சான்றிதழ் கொடுத்து டாக்டரானவர் ராமதாஸ் .. வாழப்பாடி
சென்னை:
தலித் என்று பொய் சான்றிதழ் கொடுத்து டாக்டருக்கு படித்தவர் தான் ராமதாஸ். அதைஆதாரப்பூர்வமாக நிரூபிக்கத் தயார் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர்வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்
சென்னையில் வியாழக் கிழமை வாழப்பாடி ராமமூர்த்தி அளித்த பேட்டி:
ராமதாசை பொறுத்தவரை இந்த நிமிடம் பேசுவதை அடுத்த நிமிடம் உறுதி செய்வார்என்று கூற முடியாது. நேரம், இடத்துக்கு தகுந்தாற்போல் பேசும் ஒரு மேடை பேச்சாளர்போல் அவர் பேசுகிறார். ஒரு பெண் தினம் எழுந்தவுடன் "நான் பத்தினி நான் பத்தினிஎன்று கூறுவது போல் இருக்கிறது.
அதேபோல் தான் 2001ல் பாண்டிச்சேரியில் பா.ம.க. ஆட்சி அமைப்போம் என்கிறார்.இவரது கோரிக்கையை தி.மு.க. ஏற்றுக் கொண்டதற்கு எந்தவித முகாந்திரமும்இல்லை.
நாங்கள் நடத்திய வன்னியர் மாநாட்டிற்கு அரசு பஸ்கள் வழங்கப்பட்டதாக ராமதாஸ்கூறுவது அபத்தம். ஒருவேளை ராமதாஸ் நினைப்பது போல் அரசு எங்களுக்குபஸ்களை கொடுத்திருந்தால் ராமதாசை தவிர அவரது குடும்பத்தினரும் எங்கள்மாநாட்டில் கலந்து கொண்டிருப்பார்கள்.
அந்த பஸ்சிலும் 5 பேர் இருந்தனர் என்று ராமதாஸ் கூறியுள்ளார். அவர் எப்போதும்தான், தனதுமகன், மனைவி, பேரக்குழந்தைகள், உறவினர்கள் ஆகிய 5 பேரைமட்டுமே எண்ணுவார்.
எஸ்.சி. என்று பொய் சான்றிதழ் கொடுத்து படித்து, உசிலம்பட்டியில் டாக்டர்வேலையில் சேர்ந்தவர் தான் ராமதாஸ். பொய் சான்றிதழ் கொடுத்ததாக அரசுக்கு புகார்போனதால், விசாரணைக்கு பயந்து, வாங்கிய சம்பளத்தை எல்லாம் அரசிடம் திருப்பிச்செலுத்தி விட்டு வேலையே வேண்டாம் என்று வந்தவர் தான் இந்த யோக்கியர்.
இதை அவர் மறுத்தால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கிறேன். ராமதாஸ் பாட்டாளிகளின்சாம்ராஜ்யத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
திருச்சி லோக்சபா தொகுதியில் நான் போட்டியிடப் போவதாக வெளியானது தவறானதகவல். அந்த எண்ணமே எனக்கில்லை. எனக்கும் ராமதாசுக்கும் உள்ள பிரச்னையில்தி.மு.க.வை இழுப்பது தவறு. தி.மு.க.வுக்கு இதில் சம்பந்தமே இல்லை என்றார்வாழப்பாடி ராமமூர்த்தி.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications