வறுமை: குடும்பமே கூண்டோடு தற்கொலை
சென்னை:
வறுமை வாட்டியதால் ஒரு குடும்பமே கூண்டோடு தற்கொலை செய்து கொண்டது.
இந்த சோக சம்பவம் சென்னை அருகே திருப்போரூரில் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கடப்பாக்கத்தை சேர்ந்தவர் சேகர் (40). இவரது மனைவி செல்வி(30). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு சந்தோஷ்(5), மைதிலி (3) என்ற இரண்டு குழந்தைகள்.
காதல் மணம் புரிந்ததால் பெற்றோர், உறவினர்கள் ஆதரவின்றி தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர். காலவாக்கம் கிராமத்தில் தென்னந்தோப்புஒன்றை குத்தகைக்கு எடுத்து கள் விற்பனை செய்து வந்தனர்.
கள் விற்பனைக்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசிலும் புகார் செய்தனர். போலீசார் அடிக்கடி வழக்குப் பதிவு செய்தனர்.ஆனாலும், கள் விற்பனையை சேகர் விடவில்லை.
வேறு தொழில் தெரியாததால் கள் வியாபாரத்தை தொடர்ந்தார். பல முறை புகார் சொல்லியும் பலனில்லாத ஆத்திரத்தில் ஊர் மக்கள் மீண்டும்போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சேகரையும், அவரது மனைவி செல்வியையும் போலீசார் அழைத்து கடுமையாக எச்சரித்தனர்.
இனிமேல் கள் வியாபாரம் செய்தால் தொலைத்து விடுவோம் என்று போலீஸ் மிரட்டியதால் கள் விற்பனையை கை விட்டார் சேகர். வேறுவருமானம் இல்லாததால் குடும்பம் ஆட்டம் போட்டது. வறுமை விரட்டியதால் வேறு வழியின்றி குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி சேகரும், செல்வியும், முதலில் பெண் குழந்தை மைதிலிக்கு விஷத்தை கொடுத்தனர். குடித்த சிறிது நேரத்தில் அக்குழந்தை துடி துடித்து இறந்ததைகண்ட சிறுவன் சந்தோஷ், விஷத்தை குடிக்க மறுத்து விட்டான். அவனாவது பிழைத்துக் கொள்ளட்டும் என்று சொன்னபடி சேகரும், செல்வியும் மீதி விஷத்தைமுழுவதும் குடித்து மடிந்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications