முதல்வரை சந்தித்தனர் செஸ் ஆனந்த், ஹாக்கி பிலிப்ஸ்
சென்னை:
செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், ஹாக்கி வீரர் பி.ஜே.பிலிப்ஸ் ஆகியோர் சென்னையில் முதல்வர் கருணாநிதியை செவ்வாய்க்கிழமை சந்தித்துவாழ்த்துக்கள் பெற்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தைச் சார்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர் வி.ஜே.பிலிப்ஸ் ஆகிய இருவரும் செவ்வாய்கிழமை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது இளைஞர் நல துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலாளர் அஷோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் இருந்தனர்.
விஸ்வநாதன் ஆனந்த்:
சென்னையைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 1985ல் தனது 16வது வயதிலேயே தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர். செஸ் விளையாட்டில் பல சாதனைகள்புரிந்ததற்காக 1985ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு "அர்ஜூனா விருது வழங்கி கெளரவித்தது.
1987ம் ஆண்டு உலக கிராண்ட மாஸ்டர் பட்டம் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த், அதே ஆண்டு "பத்மஸ்ரீ விருதும் பெற்றார். 1996ம் ஆண்டு ஜெனிவாவில்நடைபெற்ற சதுரங்க கிராண்ட் போட்டியில் உலக சாம்பியனான கேரி காஸ்பரோவை வென்று முதலிடம் பெற்றார்.
2000ம் ஆண்டில் சீனாவில் சென்யாங் நகரில் உலக சதுரங்க இணையம் நடத்திய போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற வீரரான இவர், தற்போதுஉலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரராகத் திகழ்கிறாார்.
வி.ஜே.பிலிப்ஸ்
ஹாக்கி விளையாட்டில் பல சாதனைகள் புரிந்த வி.ஜே.பிலிப்ஸ் 1999ம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜூனா விருது பெற்றவர்.தென்னக ரயில்வேயில் உதவி விளையாட்டு அலுவலராகப் பணிபுரியும் வி.ஜே.பிலிப்ஸ், இந்திய அணிக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியுள்ளார்.
குறிப்பாக 1972ம் ஆண்டு முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலம், 1973ல் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த 2வது உலகக்கோப்பைக்கான போட்டிகளில் வெள்ளி, 1974ம் ஆண்டு டெக்ரான் நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, 1975ல் கோலாலம்பூரில்நடந்த 3வது உலக கோப்பைக்கான போட்டிகளில் தங்கம் மற்றும் 1978ல் பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கங்களை வென்ற இந்திய அணியில் விளையாடியுள்ளார்.
மேலும் 1978ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் மற்றும் அர்ஜென்டினாவில் நடந்த உலக கோப்பைக்கானபோட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார். இந்திய அணிக்கு தலைமை தாங்கிய முதல் தமிழக வீரர் இவர்.
சதுரங்க விளையாட்டிலும், ஹாக்கி விளையாட்டிலும் பல சாதனைகள் படைத்து இந்தியாவிற்கு குறிப்பாக, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இருவரையும்முதல்வர் வெகுவாகப் பாராட்டி வாழ்த்தினார்.


Click it and Unblock the Notifications
