For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமதாஸ் விவகாரம்: முதியவர் உயிரோடு எரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

புதுவை:

டாக்டர் ராமதாஸ் தாக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் புதுவைபெரியகாட்டுப்பாளையம் காலனி பகுதியில் இருந்த குடிசை வீடுகளுக்குத் தீ வைத்தனர்.

இந்தத் தீ வைப்புச் சம்பவத்தில் பெருமாள் என்ற 70 வயது முதியவர் உயிரோடு எரிந்து சாம்பலானார்.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு:

புதுவையில் ராமதாஸ் சென்ற கார் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து பா.ம.க.வினர் கடலூரில் சாலை மறியலில்ஈடுபட்டனர். புதுவை- கடலூர் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.

கடாம்புலியூர் அருகே வன்முறைக் கும்பல் ஒன்று பஸ்சை மறித்தது. பின்னர் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்துசேதப்படுத்தி விட்டு பஸ்சின் டீசல் டேங்கை உடைத்து தீ வைத்தது.

இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு பஸ்சை விட்டு இறங்கி ஓடினர்.

பஸ் எரிப்புச் சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 க்கும் மேற்பட்ட பஸ் கண்ணாடிகள்உடைக்கப்பட்டுள்ளன.

கடலூர்-பண்ருட்டி சாலையிலுள்ள நரிமேட்டில் 25 பெண்கள் உள்பட 100 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியே வந்த 4 பஸ்கள் சிறைவைக்கப்பட்டன.

வதந்தி:

புதுவை மாநிலம் பூரணாங்குப்பம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள்அமைப்பினரைத் தாக்குவதாக வதந்தி பரவியது.

இதனால் பெரியகாட்டுப்பாளையம் பகுதியிலுள்ள விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர், பூரணக்குப்பம் பகுதிக்குச்சென்று அங்கிருந்த பா.ம.க.சிலரை வெட்டினர். அங்குள்ள வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பூரணகுப்பம் பகுதியிலிருந்த பா.ம.க.யினர்பெரியகாட்டுப்பாளையத்திற்கு ஆயுதங்களுடன் வந்தனர்.

அங்கு எதிர்பட்டோரையெல்லாம் சராமரியாகத் தாக்கினார்கள். இச்சம்பவத்தில் பெருமாள் என்பவர் இறந்தார்.

பதட்டம்:

டாக்டர் ராமதாஸ் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பெரும் பதட்டம்நிலவுகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன.

சென்னையிலும் சில இடங்களில் கல்வீச்சுச் சம்பவங்கள் நடந்தன.

விழுப்புரத்தில் இளம்பெண் சாவு:

விழுப்புரம் அருகே சென்ற அரசு பஸ் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியதில் இளம்பெண் இறந்தார்.

அவர் பெயர் ரேவதி. வயது 28. இத்தாக்குதல் சம்பவத்தில் ரேவதியின் கணவர் விநாயகமூர்த்தி, மகன்கள்பிரதீப்குமார், பிரதாப்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

சென்னையிலிருந்து கடலூருக்கு புதுவை வழியாக செல்லும் அரசு பஸ் ஒன்று திங்கள்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது.

திண்டிவனம் அருகே பஸ் வந்த போது, அங்கு பதட்டம் நிலவுவதால் விழுப்புரம் வழியாகச் செல்லும்படிபோலீஸார் டிரைவரிடம் கூறினார்.

அதன்படி, விழுப்புரம் வழியாக பஸ் சென்று கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடந்தது.

முன்னதாக, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் புதுவையில் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றுவிழாவிற்காகச் சென்று கொண்டிருந்த போது அவர் சென்ற கார் மீது தாக்குதல் நடந்தது. இதில் அவர் காயமின்றிஉயிர்தப்பினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X