For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

49 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி: விசாகப்பட்டினம் துறைமுகம் சாதனை

By Staff
Google Oneindia Tamil News

விசாகப்பட்டினம்:

விசாகப்பட்டினம் துறைமுகம் 36 மணி நேரத்தில் 49 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதிசெய்து தேசிய சாதனை படைத்துள்ளது.

விசாகப்பட்டினம் இரும்பு உருக்காலைக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து எம்.வி. ஜின் ஆன்என்ற கப்பலில் 48,861 டன் நிலக்கரி கொண்டு வரப்பட்டது. முப்பதாரரை மணி நேரத்தில்மொத்த நிலக்கரியும் கப்பலில் இருந்து இறக்கப்பட்டது.

குறிப்பிட்ட கால நிர்ணயத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகவே மொத்த நிலக்கரியும்இறக்கப்பட்டது. இதன் மூலம் 48 மணி நேரத்தில் 45,455 டன் நிலக்கரி இறக்கிஏற்கெனவே படைக்கப்பட்ட சாதனையை விசாகப்பட்டினம் துறைமுகம் முறியடித்து புதியசாதனையைப் படைத்துள்ளது.

அது தவிர, இறக்குமதி செய்யப்பட்ட 48,861 டன் நிலக்கரியில் 40,590 டன் நிலக்கரியைதுறைமுகத்திலிருந்து வெளியே அனுப்பி மற்றொரு சாதனையையும் விசாகப்பட்டினம்துறைமுகம் படைத்துள்ளது.

இச் சாதனை தவிர, நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான தொகை மற்றும் துறைமுகத்தில்கப்பல் நிற்பதற்கான கட்டணம் ஆகியவற்றிலும் கணிசமான அளவு பணத்தை இத்துறைமுகம் சேமித்துள்ளது என்று விசாகப்பட்டினம் போர்ட் டிரஸ்டின் சரக்குப்போக்குவரத்து மேலாளர் ஆர்.வி.ராமா ஷர்மா தெரிவித்தார்.

ஏற்கெனவே ஒரே நாளில் 25,517 டன் இரும்புத் தாதை இறக்குமதி செய்து ஒரு தேசியசாதனையை கடந்த மாதம் படைத்த விசாகப்பட்டினம் துறைமுகம், நடப்பு ஆண்டில்இதுவரை 185.37 டன் டன் சரக்கை கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20சதவீதம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X