இடம் மாற்றப்படும் ஒரிசா மிருகங்கள்
புவனேஸ்வர்:
ஒரிசா நந்தன்கானன் மிருகக்காட்சி சாலையிலிருந்து 43 வெள்ளை புலிகள் மற்றும் 25 சிங்கங்களை இந்தியாவிலுள்ள பிற மிருகக்காட்சி சாலைகளுக்குமாற்றத் திட்டமிட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
ஒரிசா மாநிலத்தில் தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நந்தன்கானன் மிருகக்காட்சிசாலை. 1979 ம் ஆண்டுஅமைக்கப்பட்டது இந்த மிருகக்காட்சி சாலை. உலகிலேயே அதிக அளவு வெள்ளைப்புலிகள் உள்ளது இங்குதான்.
சமீபத்தில் இங்கிருந்த 13 வெள்ளைப்புலிகள் நோய்வாய்ப்பட்டு இறந்தன. அதையடுத்து ஒரு மானும் இறந்தது. தற்போது இந்த மிருகக்காட்சி சாலையில்யானைகள், புலிகள், சிங்கங்கள் மற்றும் குரங்குகள் உள்பட 1,300 க்கும் மேற்பட்ட மிருகங்கள் உள்ளன.
தற்போது, இங்குள்ள விலங்குகளை வேறு மிருகக்காட்சி சாலைகளுக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக மத்திய மிருகக்காட்சி சாலை இயக்குநர் வினோத்குமார் தெரிவித்தார்.
சமீபத்தில் இங்குள்ள வெள்ளைப்புலிகள் இறந்தது குறித்து மத்திய அரசு அமைத்த உயர்மட்டக் குழு ஒன்று இந்த மிருகக்காட்சி சாலைக்கு வந்து விசாரணைநடத்தியது.
விசாரணையின் முடிவில் இங்குள்ள விலங்குகளை வேறு மிருகக்காட்சி சாலைக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனடிப்படையில்இப்போது மிருகங்களை மாற்றத் திட்டமிட்டுள்ளோம். அதன் முதல்கட்டமாக 12 மிருகங்கள் ஆந்திராவிலுள்ள திருப்பதி மற்றும் விசாகப்பட்டினம்மிருகக்காட்சி சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன என்றார் வினோத் குமார்.
போராட்டம்:
இதற்கிடையே, நந்தன்கானன் மிருகக்காட்சி சாலையிலுள்ள விலங்குகளை வேறு மிருகக்காட்சி சாலைக்கு மாற்றினால் போராட்டம் நடத்துவோம் என்றுகாங்கிரஸ் எம்.எல்.ஏ லாலாடேன் முஹபத்ரா தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications