உயிரியல் பூங்காவில் சிறுத்தை தாக்கி பெண் பலி
சென்னை:
சென்னை அருகே உள்ள வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிறுத்தை தாக்கியதில்அங்கு பணிபுரியும் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறுத்தைகள் பராமரிப்பாளராக வள்ளியம்மாள் (50),ஞானம்மாள் (45) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும், ஜெயசீலன்என்ற உயிரியல் பூங்கா ஊழியரும் வியாழக்ககிழமை காலை சிறுத்தைகள்வைக்கப்பட்டிருக்கும் கூண்டுக்கு வந்தனர்.
சிறுத்தைள் வைக்கப்பட்டிருக்கும் கூண்டை சுத்தம் செய்யும் பணிக்காக இவர்கள் வந்தனர்.சிறுத்தையின் கூண்டை சுத்தம் செய்யும் போது, சிறுத்தையை மற்றொரு கூண்டிற்குள்அடைப்பது வழக்கம். இந்த முறையும் அதே போல் செய்தனர்.
அந்த சமயத்தில் சிறுத்தை, அடைத்தப்பட்டிருந்த கூண்டின் கதவை வேகமாக தாக்கஆரம்பித்தது. அதன் தாக்குதல் தாங்காமல் கூண்டின் பூட்டு உடைந்து கதவு திறந்தது.
ஞானம்மாளும், ஜெயசீலனும் கூண்டை விட்டு வேகமாக வெளியேறி விட்டனர்.வள்ளியம்மாள் சிறுத்தையிடம் மாட்டிக் கொண்டார். தலை கூண்டுக்கு உள்ளேயும், கால்கள்வெளியேயும் மாட்டிக் கொண்டன.
வள்ளியம்மாளை காப்பாற்ற முயன்ற ஞானம்மாளையும் சிறுத்தை தாக்கியது. இதில்,அவருக்கு சிறு காயம் ஏற்பட்டது. அந்த நிலையில், சிறுத்தை வள்ளியம்மாளைகூண்டுக்குள் இழுத்துச் சென்று விட்டது.
பின்னர், கூண்டின் கதவு திறந்திருந்ததால் சிறுத்தை வெளியே வரும் அபாயம் இருந்தது.இதையடுத்து கூண்டின் கதவை பணியாளர்கள் மூடினர். வள்ளியம்மாளை மீட்க எடுத்தமுயற்சிகள் தோல்வியடைந்தன.. அவரது உயிரற்ற உடலையே அவர்களால் மீட்கமுடிந்தது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications