காரில் சிவப்பு விளக்கு: அமைச்சர் மகன் மீது வழக்கு
சென்னை:
கவர்னர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வாகனங்களில் மட்டுமே பொருத்தப்படும் சிவப்பு விளக்கை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டிஆறுமுகத்தின் மகன், தனது காரில் பொருத்திக்கொண்டு சேலம் மாவட்டத்தை கலக்கிக் கொண்டுள்ளார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் நெடுஞ்செழியன், சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராக இருக்கிறார். வீரபாண்டி ஆறுகத்திற்குஅடுத்தபடியாக ஆளும் கட்சியில் செல்வாக்கு மிக்கவர்.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, மாவட்ட நிர்வாகமும் அரசு அலுவலகங்களும் நெடுஞ்செழியன் சொல்வதுபடியே இயங்கும் என்கிறார்கள். இது தவிரகட்டப்பஞ்சாயத்து செய்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டு வந்தார்.
தனது தந்தையைப்போலவே, நெடுஞ்செழியனும் தனது காரில் சிவப்பு விளக்கு பொருத்தியிருக்கிறார். இதை எதிர்த்து சேலம் மாவட்ட அ.தி.மு.க செயலாளர்வெங்கடாசலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அதில், கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், நீதிபதி போன்ற மிக முக்கிய பிரகர்கள் தான் காரில் சிவப்பு விளக்கு பொருத்த அனுமதி உள்ளது. ஆனால்சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் நெடுஞ்செழியனும், துணை மேயர் சுபாஷ் என்பவரும் தங்களது காரில் சிவப்பு விளக்குகளைபொருத்தியிருக்கிறார்கள்.
இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் கூறியிருக்கிறார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி கோவிந்தராஜன் இதனை டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு அனுப்பிவைத்து உத்திரவிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications