For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைதி காக்க விரும்புகிறேன் ..அழகிரி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எனக்கு எதிராக திமுக தலைமை எடுத்துள்ள நடவடிக்கையின் பின்னணியில் யாரோசிலர் இருக்கிறார்கள் என்று சர்ச்சைக்குரிய முதல்வரின் மகன் மு.க.அழகிரி குற்றம்சாட்டுகிறார்.

என்னுடன் தொடர்பு கூடாது என்பதன் மூலம் கட்சியை விட்டு நீக்கி விட்டதாகவேஉணர்கிறேன். ஆனாலும், அமைதி காக்கவே விளைகிறேன் என்றும் அழகிரிகூறியுள்ளார்.

திமுகவில் "மதுரை தளபதி என்று கட்சியினரால் வர்ணிக்கப்பட்டவர் மு.க.அழகிரி.முதல்வர் கருணாநிதி - தயாளு அம்மையாரின் மூத்த மகன். ""திராவிட இயக்கப்போராட்டங்களில் நான் தீவிரமாகவும், ஆவேசமாகவும் ஆத்திரத்தோடும்களமிறங்கிய நாட்கள் ஏராளம். அத்தகைய காலக்கட்டத்தில் பிறந்தவன் அழகிரி.அதனால் தான் அவனுக்கு கோபம் அதிகம். அதை நீங்கள் அனுபவப்பூர்வமாகஉணர்ந்திருப்பீர்கள் என்று தந்தை முதல்வர் கருணாநிதியாலேயேசான்றுரைக்கப்பட்டவர் தான் இந்த அழகிரி.

அதனால் தானோ என்னவோ மதுரையை மையமாக கொண்டு தென் மாவட்டங்களில்அதிரடி அரசியல் நடத்தி வந்தார் அழகிரி. அதன் காரணமாக இவருக்கு ஆதரவாளர்கள்அதிகமானதுபோல், எதிர்ப்பாளர்களும் ஏராளமாக பெருகினர்.

இந்த நிலையில் அழகிரி, கட்சியில் தனது பிடியை வலுவாக்க முயன்றபோதுதான்முதல்வர் குடும்பத்தில் சிக்கல் எழுந்தது. சென்னை மேயர் பதவியை ஸ்டாலினுக்குஅளித்து கருணாநிதி அழகு பார்த்தபோது, எதிர்க்கட்சியினர் அதை விமர்சித்தனர்.

திமுகவில் வேறு யாருக்குமே இந்த தகுதி இல்லையா? ஏற்கனவே எம்எல்ஏவாகஇருப்பவருக்கே பதவி மேல் பதவியா? என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது அதை நியாயப்படுத்தி அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்ட கருணாநிதி,""பதவிகளிலும், பொறுப்புகளிலும் இருந்துகொண்டு கட்சிப் பணியாற்றும் ஒரு மகன்(ஸ்டாலின்), எந்த பொறுப்புமே வகிக்காமல் கட்சிப் பணியாற்றும் இன்னொரு மகன்(அழகிரி). முதல்வரின் வாரிசுக்கு பதவி என்றால் அழகிரி என்ன பாவம் செய்தார்?அவருக்கு எந்த பதவியும், பொறுப்பும் தரப்படவில்லையே என்று கூறியிருந்தார்.

எதிர்க் கட்சியினர் வாயை அடைப்பதற்காக தந்தையே நம்மை ஓரங்கட்டி விடுவார்என்ற பயத்தினாலோ என்னவோ அழகிரியும் கொடி பிடிக்கத் துவங்கினார்.

கட்சிப் பதவிகளில் அவரது ஆதரவாளர்களுக்கு கணிசமான "கோட்டா, கட்சியில்தனக்கு முக்கியத்துவம் என்று பேரம் பேசினார். இதனால் அழகிரி - ஸ்டாலின் சண்டைஅம்பலமானது.

மாநிலம் முழுவதும் கட்சிப் பொறுப்புகளிலும், சட்டமன்ற, நாடாளுமன்ற, அமைச்சர்பொறுப்புகளிலும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர்.

கட்சியின் இளைஞரணிக்குரிய பிரதிநிதித்துவம் என்ற பெயரில் ஸ்டாலின் தனதுகோட்டாவை நிரப்பி விடுகிறார். ஆனால், அழகிரிக்கு வழியில்லை.

அந்த கோபம் அண்ணன் - தம்பி சண்டையாக மாறி அப்பாவுக்கு தலைவலியை உண்டுபண்ணியது.

இப்போது கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவர் என்று முத்திரைக் குத்தப்பட்டு கட்சியைவிட்டே நீக்கப்படும் நிலைமைக்கு ஆளாகியுள்ார் அழகிரி. அதனால் 10 பஸ்கள்எரிக்கப்பட்டதும், பலவற்றை சேதப்படுத்தியதும் தான் மிச்சம். ஆனால், அப்பா மனதுமாறியதாகத் தெரியவில்லை.

இச்சூழ்நிலையில் அழகிரி என்ன நினைக்கிறார் என்பதை அறிய பத்திரிகைகள்முயன்றன. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்...

கட்சிப் பணிக்காக ஒரு மகன் என்று வர்ணித்த என்னோடு கட்சியினர் யாரும் தொடர்புவைத்துக் கொள்ளக் கூடாது; சந்திக்கவோ பேசவோ கூடாது என்று கட்சித் தலைமைஅறிவிப்பு வெளியிடுகிறதென்றால், அதற்கு என்ன பொருள்?

என்னை கட்சியை விட்டு நீக்கியதாக தானே பொருள். அழகிரியை கட்சியை விட்டுநீக்கி விட்டோம் என்ற வார்த்தையை மட்டும் சேர்க்காமல் என்னைதண்டித்திருக்கின்றனர். அவ்வளவு தான்.

இதற்கு பின்னணியில் யாரோ இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதெல்லாம் எனக்குத்தெரியும். ஆனாலும், அமைதி காக்கவே விரும்புகிறேன். மாற்று கட்சியில் சேரும்எண்ணமோ, ஆதரவாளர்களை கொண்டு புதிய கட்சி ஆரம்பிக்கும் திட்டமோ இல்லைஎன்றார் அழகிரி.

திமுக தலைமைக்கும், அழகிரிக்கும் இடையே நடக்கும் இந்த மோதலை, எதுவுமேதெரியாத அப்பாவி பொது ஜனம் போல் எட்ட நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் மேயர் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X