அழகிரியை கைது செய்யக் கோரி கம்யூனிஸ்ட்டுகள் ஆர்ப்பாட்டம்
மதுரை:
அழகிரி விவகாரம் தொடர்பாக மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறது மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கடந்த சில நாட்களாகவே அழகிரியின் ஆவேசத்தைதாங்க முடியாமல் மதுரை திணறிக் கொண்டிருக்கிறது.
ஆங்காங்கே பஸ் எரிப்புக்கள். போக்குவரத்து நிறுத்தப்பட்ட சாலைகள். பயத்தோடு பயணிக்கும் பஸ்கள் என்று ஏக களேபரத்தில் தத்தளிக்கிறது மதுரை.
மதுரை நகரில் அழகிரியின் ஆதரவாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை காலைமதுரை ஜான்சி ராணி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஜோதிராம் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் நன்மாறன் முன்னிலை வகித்தார். மோகன்எம்.பி ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசும் பொழுது, முதல்வர் கருணாநிதி அழகிரியுடனான மோதல் உட்கட்சி பிரச்சனை என்கிறார்.
உட்கட்சி பிரச்சனை என்றால் கட்சி அலுவலகத்திலும் குடும்பப்பிரச்சனை என்றால் வீட்டிலும் தீர்த்துக்கொள்ள வேண்டும்.அதை விடுத்துஆளுங்கட்சியினரே, வேலியே பயிரை மேய்வது போல் அரசு பஸ்களை கொளுத்துகின்றனர். இதற்கு போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
பஸ் எரிப்பு சம்பவத்தில் கவுன்சிலர் லீலாவதி கொலையாளி ஒருவர் இருக்கிறார். இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
அரசு பஸ் டெப்போவில் புகுந்து பஸ்களை எரிக்கும் அளவிற்கு அழகிரியின் செல்வாக்கு உள்ளது. நாங்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தபிறகுதான் ஒரு சில தி.மு.கவினரை கைது செய்துள்ளனர்.
சாதாரணமானவர்களை கைது செய்தால் பயனில்லை. உண்மையில் கைது செய்யப்படவேண்டியவர் அழகிரிதான். ஆனால் முதல்வர் மகன் என்பதால் போலீஸ்கைது செய்ய பயப்படுகிறது.
சாதாரண குடிநீர், ரோடு வசதி, கழிப்பிடவசதி கோரி போராட்டம் நடத்தினால் கைது செய்து சிறையில் தள்ளும் கருணாநிதி அரசு பஸ்களை எரிக்கத் தூண்டியதனது மகனை என்ன செய்யப்போகிறார் என்று ஆக்ரோஷமாக பேசினார் எம்.பி.மோகன்.
ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அண்ணன் - தம்பி, அப்பா- மகன், பிரச்சனைக்கு அரசு பஸ்களை கொளுத்துவதுநியாயமா? குடிநீர், சாலை வசதி கோரி போராடினால் உள்ளே தள்ளும் கருணாநிதி, உங்கள் வீட்டு பிரச்சனைக்கு மகன் அழகிரி மீது என்ன நடவடிக்கை?
எரிந்த பஸ்களுக்கு அழகிரி நஷ்ட ஈடு வழங்குவாரா? நெஞ்சுக்கு நீதி எழுதிய கருணாநிதி அழகிரி விஷயத்தில் அடக்கி வாசிப்பது ஏன்? என்று பலத்தகோஷங்களை எழுப்பினார்கள் கம்யூனிஸ்ட் கட்சித்தொண்டர்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications