"தாராளமயமாக்கலால் பஞ்சாலைகளுக்கு பாதிப்பு வரும்
கோவை:
தாராளமயமாக்கப்படும் இறக்குமதிக் கொள்கையால் பஞ்சாலைகளுக்கு பாதிப்புவரும் என தென்னிந்திய பருத்திக் கழகம் (சைகா) கவலை தெரிவித்துள்ளது.
கோவையில் தென்னிந்திய பருத்திக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் தலைவர் சவுந்தர்ராஜன் பேசியதாவது:
தமிழகத்தில் பருத்தி உற்பத்தியைப் பெருக்க அரசு நடவடிக்கை எடுப்பதாக கடந்தஆண்டு அறிவித்தது. தற்போதுள்ள பருத்தி உற்பத்தியான 5 லட்சம் பேல்களிலிருந்து15 லட்சம் பேல்களாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 5 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களைமேம்படுத்தப் போவதாகக் கூறியது. ஆனால் இதுவரை இதற்கான முறையானநடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
தாராளமயாக்கப்பட்ட இறக்குமதிக் கொள்கையால் பஞ்சாலைகள் பெரும்பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தக ஒப்பந்தம்,இந்தியாவில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்தியப் பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது.இதனால் மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய தற்போது அதிக அளவில் இந்தியப்பணம் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் பருத்தி இறக்குமதி கணிசமான அளவு உயர்ந்துள்ளது. முன்எப்போதும் இல்லாத அளவிற்கு இது இரண்டு மில்லியன் பேல்களாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் விலையும் பருத்தி, ஏற்றுமதித் தரம் வாய்ந்ததாக இல்லை. இங்குள்ளமில்களுக்குப் பயன்படும் விதத்தில் கூட இவை இல்லை. எனவே, இதனைத்தவிர்க்கவும், தரமான பருத்தியை உற்பத்தி செய்யவும் அரசு உரிய ஆராய்ச்சியைமேற்கொள்ள வேண்டும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications