பிரியாணி பொட்டல அரசியல்: சுவாமி கிண்டல்
மதுரை:
அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி, மூப்பனார் மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்தார்.
மதுரை அருகேயுள்ள ஊமச்சிக்குளத்தில் ஜனதா கட்சியின் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமிபேசியதாவது:
தமிழகத்திற்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் வரவிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஊழல்வாதிகளையும், தகுதி இல்லாதவர்களையும் மக்கள் புறக்கணிக்கவேண்டும். அரசியலைச் சுத்தமாக்கும் சக்தி மக்களாகிய உங்களுக்குத்தான் இருக்கிறது.
இந்தத் தேர்தலில் ஜனதாக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளில் ஜனதா கட்சி வேட்பாளர்களை நிறுத்துவேன்.
இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் மக்கள் வரிப்பணத்தை சுரண்டி கோடி, கோடியாக சம்பாதித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
அவர்கள் மக்களுக்கு நோட்டு கொடுத்து ஓட்டு வாங்குவார்கள். பிரியாணி பொட்டலங்கள் வாங்கிக் கொடுத்து பெரும் கூட்டம் சேர்ப்பார்கள்.
ஆனால், என்னால் அதிக அளவு செலவு செய்ய முடியாது. ஊழல் மூலம் சேர்த்த பணம் என்னிடம் கிடையாது. ஓட்டுக்காக லட்டுக்குள் மூக்குத்தியைமறைத்து வைத்துக் கொடுக்க என்னால் முடியாது.
அதிமுக கூட்டணியில் நான் இருந்தபோது ஜெயலலிதாவை நம்பாதே என்று மூப்பனார் கூறினார். நான் விலகி விட்டேன். மூப்பனார் சேர்ந்து விட்டார்.
கூட்டணி ஆட்சிக்கு ஜெயலலிதா ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார். மூப்பனார் தன்மானத்தோடு கடமையாற்ற வேண்டுமானால் அதிமுககூட்டணியை விட்டு வெளியேறி மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்றார் சுப்ரமணியம் சுவாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications