என்ன நேர்ந்தது இந்தியன் ஏர்லைன்சுக்கு?

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோழிக் கோட்டிலிருந்து கோவை வழியாக டில்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இயந்திரக்கோளாறுகாரணமாக கோவையில் நிறுத்தப்பட்டது. இதில், இருந்த 69 பயணிகள் கோவை விமான நிலையத்தில் தங்கவைக்கப்ப்டடனர்.

கடந்த 3 நாட்களாகவே இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தொடர்ந்து பிரச்சனையில் சிக்கி வருகின்றன.சென்னை விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் செல்லப் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ்விமானம் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக 3 முறை குட்டிக்கரணம்அடித்தது. விமானயின் சாமர்த்தியத்தால் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் அதிலிருந்த 187 பயணிகளும்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதற்கிடையே புதன்கிழமை பிற்பகல் சென்னையிலிருந்து கொழும்பிற்கு செல்லவிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ்விமானம் சென்னையில் விமானப்பயணி ஒருவரை விட்டுவிட்டுச் சென்றது. விமானம் ரன்வேயில்ஓடிக்கொண்டிருந்தபோது, அந்த விமானத்தில் செல்லவிருந்த பயணி ஒருவர் விமானம் ரன்வேயில் ஓடுவதைப்பார்த்து விமான நிலைய அதிகாரிகள், விமானிக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமானம் திரும்பி வந்தது.பயணியை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது.

இந்நிலையில் புதன்கிழமை கோழிக்கோட்டிலிருந்து டில்லி செல்ல காலை 10.30 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ்விமானத்திலும் பிரச்சனை ஏற்பட்டது.

கோழிக்கோட்டிலிருந்து கோவை வந்து கொண்டிருந்த இந்த விமானத்தில் திடீர் என இயந்திரக் கோளாறுஏற்பட்டது. இதையடுத்து, இந்த விமானம் கோவையில் நிறுத்தப்பட்டது. இவ்விமானத்தில் பறவை மோதியதால்கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோழிக்கோட்டிலிருந்து டெல்லி செல்ல இருந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 168 பேர் பயணம் செய்தனர்.இவர்கள் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாலை வரை இவர்களுக்கு மாற்று ஏற்பாடு எதுவும்செய்யப்படவில்லை.

கடந்த செப்டம்பர் 25ம் தேதி மாலை 7.45 மணிக்கு கோவை வந்து சேர வேண்டிய சென்னையிலிருந்து கோவைவழியாக பெங்களூர் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகாரணமாக இது சென்னையிலேயே நிறுத்தப்பட்டது. இந்த விமானப் பயணிகள் மாற்று விமானம் மூலம் பயணம்சென்றனர்.

அடிக்கடி இயந்திரக் கோளாறு காரணமாக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் நிறுத்தப்படுவதால், பயணிகள்அதிருப்தியடைந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+