சிறந்த மாநிலம் தமிழகம் .. சிறந்த மாநகராட்சி சென்னை
சென்னை:
தேசிய அளவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தையும், சிறந்த மாநகராட்சியாக சென்னைமாநகராட்சியையும் பாப்புலேஷன் பவுண்டேஷன் ஆப் இந்தியா என்ற அமைப்புதேர்ந்தெடுத்துள்ளது.
இதற்கான விருது வழங்கும் விழா நவம்பர் மாதம் டெல்லியில் நடைபெறுகிறது.பிரதமர் வாஜ்பாயிடம் இருந்து மேயர் மு.க.ஸ்டாலின் விருதைப் பெற்றுக் கொள்கிறார்.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் வியாழக் கிழமை இதுகுறித்துத்தெரிவிக்கப்பட்ட தகவல் வருமாறு:
பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தேசியஅளவில் விருது கிடைத்துள்ளது.
ஜே.ஆர்.டி. டாடா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் பாப்புலேஷன் பவுண்டேஷன்ஆப் இந்தியா என்ற அமைப்பு தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாகவும்,குழந்தைகளுக்கான திட்டங்களை செயல்படுத்தும் சிறந்த மாநகராட்சியாக சென்னைமாநகராட்சியையும் தேர்ந்தெடுத்துள்ளது.
இதற்கான விருது மற்றும் பரிசளிப்பு விழா நவம்பர் முதல் வாரத்தில் டெல்லியில்நடைபெறுகிறது. இதில் பிரதமர் வாஜ்பாய் விருதுகளை வழங்குகிறார்.
தமிழ்நாட்டிற்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசும், சென்னைமாநகராட்சிக்கு விருதும், ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. இதை மேயர்ஸ்டாலின் பெறுகிறார்.












Click it and Unblock the Notifications