சீனாவில் சுரங்க வெடிவிபத்தில் 135 பேர் சாவு
பீஜிங்:
தென் மேற்கு சீனாவிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தில், புதன்கிழமை காஸ் கசிவினால்ஏற்பட்ட விபத்தில் 135 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.
குய்ஸோவ் மாகாணத்திலுள்ள லியப் அன்சு நகருக்கு அருகே உள்ள முச்சோன்காவ்நிலக்கரி சுரங்கத்தில் இத விபத்து புதன்கிழமை மாலை நடந்தது.
விபத்து நடந்தபோது மொத்தம் 243 ஊழியர்கள் சுரங்கத்தின் உள்ளே இருந்ததாகத்தெரிகிறது. வியாழக்கிழமை பிற்பகல் வரை 135 பேருடைய சடலங்கள் மீட்கப்பட்டன.இன்னும் 27 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களும்உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
காயமடைந்த 81 பேர் தப்பினர் அல்லது மீட்கப்பட்டனர். அரசுக்குச் சொந்தமான இந்தசுரங்கத்தில் ஆண்டுக்கு 9 லட்சம் டன் நிலக்கரி வெட்டியெடுக்கப்படுகிறது. மொத்தம்மூன்று ஷிப்ட்டுகளில் சுரங்கம் இயக்கப்படுகிறது. ஒரு ஷிப்ட்டில் 4500 சுரங்கத்தொழிலாளர்கள் வரை வேலை பார்ப்பது வழக்கம்.












Click it and Unblock the Notifications