சென்னைக்கு ஓடி வந்த 3 கோவை மாணவர்கள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையை சுற்றிப் பார்க்கும் ஆசையில் சென்னைக்கு ஓடி வந்தகோவை சிறுவர்கள் மூவரை போலீசார் மீட்டனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள முருகன் நகரைச்சேர்ந்தவர் மணி. அவரது மகன் மூர்த்தி (13). 7ம் வகுப்புமாணவன்.

விநாயகபுரத்தை சேர்ந்த துரைசாமி மகன் தினேஷ் (12),சண்முகத்தின் மகன் கோபி (13). இருவரும் படிப்பை பாதியில்நிறுத்தி விட்டு லேத் பட்டறையில் வேலை பார்க்கின்றனர்.

மூர்த்தி, தினேஷ், கோபி மூவரும் நண்பர்கள். இவர்களுக்குசென்னையை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று தீராத ஆசை. அந்தஆசையில் வீட்டில் இருந்த 900 ரூபாய் பணத்துடன் மூவரும்ரயில் ஏறி விட்டனர்.

26-ம் காலை சென்னை வந்து சேர்ந்த மூவரும் நேராக மெரீனாகடற்கரைக்கு சென்றனர். அங்கும் இங்கும் திரிந்தனர். கையில்இருந்த பணத்தை எல்லாம் செலவு செய்து தீர்த்தனர்.

பணம் காலியானதும் வழி தெரியவில்லை. மறுபடியும் ஊருக்குபோய் விடுவது என்ற முடிவோடு சென்ட்ரல் ரயில் நிலையம்வந்தனர். அங்கு பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில்இந்த சிறுவர்களை அழைத்து விசாரித்தார்.

விவரம் தெரிய வர மூவரையும் புரசைவாக்கத்தில் உள்ள சிறுவர்இல்லத்தில் ஒப்படைத்து விட்டு, பெற்றோர்களுக்கு தகவல்கொடுத்தனர். பதறி அடித்தபடி பெற்றவர்கள் சென்னை வந்தனர்.அவர்களிடம் சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+