ராஜ்குமார் விடுவிக்கப்படுவார்... கருணாநிதி நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்த முறை எப்படியும் கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்கப்படுவார் என்று தமிழகமுதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டையில் வியாழக் கிழமை முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி:

கேள்வி: கன்னட நடிகர் ராஜ்குமார் 3 நாளில் வந்து விடுவார் என்று கர்நாடகஅமைச்சர் கூறியிருக்கிறாரே?

பதில்: ஒரு திருவிழாவை ஒட்டி வந்து விடுவேன் என்று ராஜ்குமார் கேசட்டில் பேசிஅனுப்பியதை வைத்து அப்படி கூறியிருக்கலாம். எங்களுக்கு எந்த தகவலும் இல்லை.ராஜ்குமார் வருவது பற்றி வேறு எந்த தகவலும் இல்லை.

வீரப்பனுடன் பேச காட்டுக்குச் சென்றுள்ள நக்கீரன் கோபால் இம்முறை வெற்றிகரமாகவருவார் என்று நம்புகிறோம். ராஜ்குமார், உள்பட நான்கு பேரையும் அவரால்இம்முறை மீட்க முடியும் என்று நம்புகிறோம்.

வீரப்பன் கோரியுள்ள கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில்மத்திய அர சு மனு செய்துள்ளது. இது நம்பிக்கை தரும் விதத்தில் உள்ளது.

கைதிகள் விடுவிப்பு தொடர்பான வழக்கில் மாநில அரசுகளுக்குச் சாதகமான தீர்ப்பைசுப்ரீம் கோர்ட் வழங்கும் என்று நம்புகிறோம். அதற்கு முன்பே கூட ராஜ்குமாரை மீட்டுவிட முடியும் என்று நம்புகிறோம். தற்போதைய நிலவரம் குறித்து வீரப்பனிடம்,கோபால் விளக்குவார் என்று நினைக்கிறோம்.

கேள்வி: பெட்ரோல் பொருட்கள் மீதான விலை உயர்வை சமாளிக்க மாநிலங்கள்அதன் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது பற்றி?

பதில்: தமிழகம் உள்பட சில மாநிலங்களுக்கு 11வது நிதிக் குழு 900 கோடி ரூபாய்அளவுக்கு நிதிக் குறைப்பு செய்துள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியைகுறைத்தால் மேலும் வருவாய் குறையும். எனவே இதை பரிசீலித்துத்தான் முடிவுசெய்ய வேண்டும்.

கேள்வி: பெட்ரோலியப் பொருட்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்குஇருந்த தடை நீக்கப்பட்டுள்ளது சாதகமா அல்லது பாதகமா?

பதில்: போகப் போகத் தான் தெரியும்.

கேள்வி: த.மா.கா போராட்டம் பற்றி...?

பதில்: போராட்டத்தில் ஒன்றேகால் லட்சம் பேர் கைதானதாகவும், அவர்களில் 80ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தமாகா கூறுகிறது. இது எப்படிசாத்தியமாகும்? தமிழ்நாட்டில் 9 பெரிய சிறைகள். இவற்றில் ஏற்கனவே 17 ஆயிரம்பேர் உள்ளனர். அப்படியிருக்கும் போது 80 ஆயிரம் பேர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர் என்பது வேடிக்கையானது.

கேள்வி: சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவித்து விட்டு சிலர் ஜாமீனில்வெளிவந்துள்ளனரே?

பதில்: இதுவும் ஒரு வேடிக்கை தான். சிறை நிரப்பும் போராட்டம் என்று மறியலில்ஈடுபட்டு விட்டு சிறைக்கு செல்ல மறுத்துள்ளனர். ரிமான்ட் என்றுஅனுப்பப்பட்டபோதிலும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். ஜாமீனில் விடுதலைசெய்யுமாறு சில முக்கியத் தலைவர்கள் வாதாடியுள்ளனர்.

மொத்தத்தில் 12 ஆயிரத்து 500 பேர் கைதானதில் 9500 பேர் சிறையில்அடைக்கப்பட்டனர். அவர்களில் 300 பேர் பெண்கள். ஜாமீனில் 7500 பேர்வெளிவந்துள்ளனர்.

கேள்வி: பெரியார் விழா நடத்தி விட்டு காளி கோவிலில் யாகம் நடத்தியுள்ளாரேஜெயலலிதா?

பதில்: அவர் ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கெல்லாம் ஒருசுற்று போய் விட்டு வந்து தான் பெரியார் விழா நிடத்தினார். இப்போது இரண்டாவதுரவுண்ட் போய் இருக்கிறார்.

கேள்வி: பெரியாரை எதிர்த்து தான் திமுக தோன்றியது. திமுகவில் எப்போதும்பெரியார் விழா கொண்டாடப்படுவதில்லை. முப்பெரும் விழா என்ற பெயரில் தான்விழா நடத்தப்படுகிறது. இது முரண்பாடு கொண்டதாக இருக்கிறது என்று தி.க.தலைவர் வீரமணி கூறியுள்ளாரே?

பதில்: இதில் முரண்பாடு ஏதும் இல்லை.

கேள்வி: தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா திடீரென்று மாற்றப்பட்டுள்ளது ஏன்?

பதில்: அதை இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனிடம் தான் கேட்க வேண்டும்.

கேள்வி: பாமக தொண்டர்களை போலீசார் கடுமையாக தாக்குவதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாரே?

பதில்: எந்த கட்சியினரையும் போலீசார் வேண்டுமென்றே தாக்குவதில்லை. பஸ்சைகொளுத்தியவர்கள் மீது தான் நடவடிக்கை எடுத்துள்ளனர். திமுகவினர் 8 பேர் கூடதேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல்பாமகவினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+