யாழ்பாண மாணவனை வெட்டிக் கொன்ற இலங்கை ராணுவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் ஈழப் பிரச்னையில் காங்கிரஸ் போல் வாஜ்பாய் அரசு எந்த முட்டாள்தனம் எதையும் செய்யவில்லை என்று மதிமுகபொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

இதுகுறித்து வைகோ அளித்துள்ள பேட்டி:

தமிழ் ஈழம் விஷயத்தில் நான் மத்திய அரசுக்கு எந்த தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தவில்லை. அதே நேரம் முந்தைய காங்கிரஸ்அரசுகள் செய்தது போல எந்த முட்டாள் தனத்தையும் வாஜ்பாய் அரசும் செய்யவில்லை.

அதோடு தமிழர்களின் நலனில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல், பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம்இருந்து இலங்கை அரசு பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் வாங்கி குவித்து வருகிறது.

இந்த ஆயுதக் குவியலை கொண்டு அப்பாவி மக்கள் மீது கொடூர தாக்குதலை மீண்டும் தொடங்கி இருக்கிறார்கள். யாழ்ப்பாணம்பல்லைக்கழக மாணவர் ஒருவரை இலங்கை ராணுவம் வெட்டி துண்டு துண்டாக்கி கொன்றிருக்கிறது.

இதுபற்றி அந்த மாணவனின் தந்தை பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதி இருக்கிறார். இப்படி அப்பாவி மக்கள் இலங்கைராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறார்கள்.

தமிழர்களின் பாதுகாப்பை மத்திய அரசு இலங்கையிடம் வலியுறுத்தி வருவது ஒரு சாதகமான நிலை என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+