புலிகள் பயங்கர தாக்குதல்: 150 வீரர்கள் பலி, 500 பேர் காயம்
கொழும்பு:
சாகவச்சேரியில் தங்களைத் தாக்கிய ராணுவத்தினரை விடுதலைப் புலிகள் பயங்கரமாகத் திருப்பித் தாக்கினர். இதில்150 ராணுவத்தினர் பலியாயினர். 500 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு முதல் இந்த அதி பயங்கர தாக்குதலை புலிகள் தொடங்கியுள்ளனர்.
சாகவச்சேரியை புலிகளிடமிருந்து இரு வாரங்களுக்கு முன் மீட்டுவிட்டதாகக் கூறிய ராணுவத்தினருக்கு அந்தப்பகுதியில் கிடைத்துள்ள மிகப் பெரிய அடியாகும் இது.
இது தொடர்பாக புலிகளின் லண்டன் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ராணுவத்துக்கு எதிராக ஓயாதஅலைகள்-4 என்ற தாக்குதலை துவக்கியுள்ளோம். கிலாலி-முகமலை-நாகர்கோவில் பகுதியில் இந்தத் தாக்குதல்நடத்தினோம்.
இதன்மூலம் நாகர்கோவிலில் உள்ள ராணுவத்தினருக்கு ஆயுதங்கள், உணவு கொண்டு செல்லப்படும வழியைதுண்டித்துவிட்டோம். இந்த இடம் யானை இரவு பகுதியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது என்று புலிகள்கூறியுள்ளனர்.
ஆனால், இதை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சனத் கருணாரத்னே வழக்கம்போல் மறுத்தார்.மொத்தம் 29 வீரர்கள் மட்டுமே இறந்தனர். 132 வீரர்கள் மட்டுமே காயமடைந்தனர். ஆபரேசன் கினிஹீரா-2 என்றபெயரில் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மடுவில், சரசலை பகுதிகள் ராணுவத்திடம் சிக்கிவிட்டன.
செவ்வாய்க்கிழமை கிலாலிக்கு தெற்கில் இருந்தும் பலாலியின் வடக்குப் பகுதியில் இருந்து புலிகள் ஆர்டிலரி,மார்ட்டர் துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இதமலத்துவா பகுதியிலிருந்து ராணுவத்தினர்பின்வாங்கி 2 கி.மீ. தூரம் உள்ளே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 50 புலிகளும் இறந்தனர். புலிகளின் தாக்குதல் புதன்கிழமையும் தொடர்ந்ததுஎன்றார்.
கடந்த சில வாரங்களில் புலிகள் நடத்தியுள்ள மிகப் பெரிய பதிலடித் தாக்குதல் இது தான். தேர்தலை ஒட்டி மேலும்ஆக்ரோஷத்துடன் புலிகள் தாக்கக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications