4 இலங்கை அகதிகள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
சென்னை:
தமிழகத்தில் அகதிகளாக இருந்து வந்த 4 இலங்கை அகதிகள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்குமிடையே கடந்த 17 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. இதனால் அங்கு வாழும் தமிழர்கள்அகதிகளாக தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
1990 ம் ஆண்டு இலங்கைக் கண்டியைச் சேர்ந்த சரவணமுத்து அவரது மனைவி பத்மினி ஆகியோர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாகத் தப்பி வந்தனர். அவர்களைகும்மிடிப்பூண்டி அருகிலுள்ள அகதிகள் முகாமில் தமிழக அரசு தங்க வைத்து இருந்தது.
இந்த நிலையில் 1991 ம் ஆண்டு பத்மினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைகளுடன் முகாமில் வாழ்ந்து வந்த பத்மினி 1994 ம் ஆண்டு இறந்து விட்டார்.அவரைத்தொடர்ந்து குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக இருந்து வந்த தந்தை சரவணமுத்துவும் கடந்த ஆண்டு இறந்து போனார்.
தாயும், தந்தையும் இறந்து போனதால் அவர்களது குழந்தைகள் அமுதா (20), சந்திரமோகன் (19), சதீஷ்குமார் (9), தார்ஷினி (15) ஆகிய 4 பேரும்முகாமிலேயே வாழ்க்கை நடத்தி வந்தனர்.
இவர்களின் உறவினர் ராஜரத்தினம் இலங்கை கண்டியில் உள்ளார். அவர் டெல்லியில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தில் ஆதரவின்றி தவிக்கும் 4 பேரையும்தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அவர்களை ராஜரத்தினத்திடம் ஒப்படைக்க தமிழக செஞ்சிலுவைச் சங்கம் முடிவு செய்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications