ஒலிம்பிக் தோல்வி .. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருத்தம்
சென்னை:
ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் படுதோல்வி அடைந்தது வருத்தமளிக்கிறது. எதிர்காலத்தில் நல்லதிறமையுள்ள வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அரசு ஊக்கம் அளிக்கும் என்று மத்திய இளைஞர் நலம்மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நாகர்கோவில் பாஜகநாடாளுமன்ற உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் வந்த அவருக்கு குமரி மாவட்ட பாஜக சார்பில்வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கடந்த தேர்தலில் கிடைத்துள்ள வெற்றியின் மூலம் குமரி மாவட்டத்திற்குஇந்த அமைச்சர் பொறுப்பு கிடைத்துள்ளது.
இது குறிப்பிட்ட இனத்திற்கோ அல்லது கட்சிக்கோ சொந்தமானதல்ல. இங்குள்ள அனைத்து மக்களுக்கும்சொந்தமான பதவி.
எனக்கு அளித்திருக்கும் இந்த பொறுப்பின் மூலம் எதிர்காலத்தில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதைநடைமுறைப்படுத்த முயற்சிப்பேன். சாதி, மத இன வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் உழைப்பதே என்கடமை.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் படுதோல்வி அடைந்துள்ளது வருத்தமளிக்கிறது.எதிர்காலத்தில் நல்ல திறமையுள்ள வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு அரசு எல்லா வகையிலும் ஊக்கம்அளிக்கும் என்றார் அவர்.
பின்னர் மண்டைக்காடு கோவிலுக்கு சென்று வழிபட்டார் அமைச்சர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications