டெல்லி வந்தார் புடின்
டெல்லி:
இந்தியாவில் மூன்று நாள் பயணமாக ரஷிய அதிபர் விலாடிமிர் புடின் திங்கள்கிழமைமாலை டெல்லி வந்து சேர்ந்தார்.
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷியாவிலும், பொக்ரான் அணுகுண்டுசோதனைக்குப் பிறகு இந்தியாவிலும் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ்நிலையில்புடினின், இந்திய விஜயம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
47 வயதாகும் முன்னாள் கே.ஜி.பி. ஒற்றரான புடினுடன், அவரது மனைவி லூத்மிலாபுடினா மற்றும் உயர் மட்டக் குழுவினர் வந்துள்ளனர். அமெரிக்க அதிபரின் ஏர்போர்ஸ்ஒன் விமானத்திற்கு இணையான ஐஐ-96 சிறப்பு விமானத்தில் புடின் வந்தார்.
திட்டமிட்ட நேரத்திற்கு 50 நிமிஷங்களுக்கு முன்னதாகவே புடினின் விமானம் டெல்லிவந்து சேர்ந்தது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரஷிய அதிபர் ஒருவர் இந்தியா வருவதுஇதுவே முதல் முறையாகும்.
விமானநிலையத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், திட்டமிடுதல் துறைஅமைச்சர் அருண் செளரி, அதிகாரிகள் மற்றும் ரஷிய தூதரக அதிகாரிகள் புடினைவரவேற்றனர்.
விமான நிலையத்திலிருந்து நேராக ஹோட்டல் மெளரியா ஷெரட்டன் ஹோட்டலுக்குபுடின் அழைத்துச் செல்லப்பட்டார். பேட்டி தருமாறு விமான நிலைய வரவேற்பறையில்காத்திருந்த செய்தியாளர்கள் கோரியதற்கு வெறுமனே புன்னகைத்து, கையசைத்து விட்டுபுடின் சென்று விட்டார்.
புடினையும், அவரது மனைவியையும் வரவேற்கும் பேனர்கள் புடின் கார் சென்ற சாலைமுழுவதும் நிறைந்திருந்தது.
செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மாளிகையில் புடினுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்புவழங்கப்படுகிறது. அப்போது ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் புடினை வரவேற்பார்.பின்னர் காந்தி சமாதியில் புடின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்.
பின்னர் பிரதமர் வாஜபேயியுடன் புடின் பேச்சு நடத்துகிறார். பல்வேறு பிரச்சினைகள்குறித்து இருவரது பேச்சிலும் இடம் பெறும். ரஷியாவின் இயற்கையான தோழன் இந்தியாஎன்று தனது வருகைக்கு முன்பு மாஸ்கோவில் அளித்த பேட்டியில் புடின் கூறியிருந்தார்.
தற்போதைய வருகை மூலம் இந்தியா, ரஷியா இடையே சோவியத் யூனியன் காலத்தில்இருந்த அரசியல், பாதுகாப்பு உறவு பலப்படும் என்று இரு தரப்பினரும்எதிர்பார்க்கிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications