ராஜினாமாவை வாபஸ் பெற்றார் மம்தா பானர்ஜி
மும்பை:
மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த மம்தா பானர்ஜி, தனது ராஜினாமாவைவாபஸ் பெற்றுக் கொண்டு மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர்ந்தார்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரித்தது. இதையடுத்துஇந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது.
இதையடுத்து மத்திய அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்த திரிணமூல்காங்கிரஸ் தலைநர் மம்தா பானர்ஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.அவருடன் மற்றொரு திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர் அஜித் குமார் பாஞ்சாவும்ராஜினாமா செய்தார்.
இந் நிலையில், மும்பையில் தான் செய்து கொள்ள உள்ள கால் மூட்டு வலி அறுவைசிகிச்சைக்குப் பிறகு பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றம் குறித்து மீண்டும்பரிசீலிப்பதாக பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார்.
மேலும், மம்தா பானர்ஜியையும் அவர் தொடர்பு கொண்டு ராஜினாமாவை வாபஸ்பெறும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து தனது ராஜினாமாவை மம்தா பானர்ஜிவாபஸ் பெற்றுக் கொண்டார்.
உடனே தான் மத்திய அமைச்சரவையில் மீண்டும் சேருவதாக அவர் அறிவித்தார்.இதையடுத்து தேசிய ஜனநாயக் கூட்டணி அரசில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தீர்ந்தது.












Click it and Unblock the Notifications