தவறு செய்தது கருணாநிதி தான்- மூப்பனார்
சென்னை:
முதல்வர்தான் முதலில் என்னை கைவிட்டுப் போனார். தவறு செய்தது அவர்தான்என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார் தெரிவித்தார்.
சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னையில் நடைபெற்றசமுதாய நல்லிணக்க விழாவில் அவர் பேசியதாவது:
மறைந்த அப்துல் சமதுவின் 75-வது பிறந்த நாள் விழா இங்கு சமுதாய நல்லிணக்கவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அரசியலில் எனக்கும் சமதுவுக்கும் பலசமயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
இருந்தபோதிலும், நாங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் நட்புடனே பழகினோம்.அவரது மறைவுக்குப் பின் அவரது கட்சியை நடத்தி வரும் காதர் முகைதீனுடனும் அந்தநட்பு தொடர்கிறது. இந்த நட்பு என்றென்றும் தொடரும். என் வாக்கை நான்காப்பாற்றுவேன்.
நெல்லை, தூத்துக்குடியில் நடந்த விழாக்களில் என்னை முதல்வர் கருணாநிதிகடுமையாக விமர்ச்சித்துப் பேசியுள்ளார். நான் அந்தப் பக்கம் போய்விட்டேன், இந்தப்பக்கம் போய்விட்டேன் என்று என் மீது அவர் தவறு சொல்கிறார்.
எல்லாவற்றுக்கும் அவர்தான் காரணம். முதலில் பிரிந்து போனது நானா? இல்லேயை.அவர்தான் என்னை கைவிட்டுப் போனார். தவறு செய்தது அவர்தான். அதை நான்சுட்டிக் காட்டினால், என் மீது அவருக்குக் கோபம் வருகிறது. எல்லாவற்றுக்கும்அவர்தான் பதில் சொல்லவேண்டும்.
1996-ம் ஆண்டு தேர்தலில் நானும், கருணாநிதியும் மற்றவர்களும் மதவாத சக்திகள்ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்குத்தான் ஒன்று சேர்ந்தோம்.
மதவாதத்தை எதிர்ப்பது என்ற ஒரே கொள்கையில்தான் ஒன்று சேர்ந்தோம். ஆட்சிஅமைத்தோம். இதைச் சொன்னால் கலைஞருக்கு என் மீது கோபம்.
நரசிம்மராவுக்குக் கிடைக்கும் மரியாதைதான் எனக்குக் கிடைக்கும் என்றார் அவர்.எனக்கு எந்த மரியாதை கிடைத்தாலும் கிடைக்கட்டும். மதவாதத்தை எதிர்ப்பது என்றகொள்கையில் இருந்து பின் வாங்கமாட்டோம்.
எந்தச் சூழ்நிலையிலும் மதவாதம் தலைதூக்க விடமாட்டோம். சமுதாய ஒற்றுமைக்காகதமாகா தொடர்ந்து போராடும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டும்என்றார் மூப்பனார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications