ரேடியே வெங்கடேசனை விடுதலை செய்யவேண்டும்: தமிழ்நாடு விடுதலைப் படை மிரட்டல்
காஞ்சிபுரம்:
தடா கைதி ரேடியோ வெங்கடேசனை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தை குண்டு வைத்துத் தகர்ப்போம் என்று தமிழ்நாடுவிடுதலைப் படையினர் மிரட்டி உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் உளவுத்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்தவர் ரேடியோ வெங்கடேசன். இவர் தடா கைதியாக திருச்சி மத்திய சிறையில் இருக்கிறார்.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார் வீரப்பன். அவரதுகோரிக்கைகளில் ஒன்று தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 5 தமிழ்த் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பதுதான்.
அந்த 5 தமிழ்த் தீவிரவாதிகளிகளில் ரேடியோ வெங்கடேசனும் ஒருவர். உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் விடுதலை தாமதமாகிக் கொண்டிருக்கிறஇந்நேரத்தில் சென்னையில் உள்ள தென்னக ரயில்வே அலுவலகத்திற்கு சனிக்கிழமை ஒரு கடிதம் வந்தது.
அதில் தடா கைதியாக உள்ள ரேடியோ வெங்கடேசனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காஞ்சிபுரம் ரயில்வே நிலையத்தைவெடிகுண்டு வைத்துத் தகர்ப்போம். மேலும் அதிக மானியம் கோரி ஊர்வலம் நடத்திய கரும்பு விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீஸாரைக்கொல்வோம் என்றும் எழுதியிருந்த கடிதத்தில் தமிழ்நாடு விடுதலைப் படை என்றும் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனடியாக, காஞ்சிபுரம் ரயில்வே நிலையம் சோதனையிடப்பட்டது. ரயில் நிலையத்தைச் சுற்றி 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு வெடிகுண்டு சோதனைநடத்தப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வைத்து நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை.
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் தீபாவளி வரை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications