மேற்கு ஆசிய பிரச்சினை முற்றுகிறது: தாக்குதலை நிறுத்த பாலஸ்தீனத்துக்கு இஸ்ரேல்கெடு
ஜெருசலம்:
அடுத்த 48 மணி நேரத்துக்குள் பாலஸ்தீனியர்கள் தங்களது தாக்குதலை நிறுத்திக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டுமுழுமையான தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபடும் என்று அந் நாட்டுப் பிரதமர் ஈத் பாரக்எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதியில் 3 இஸ்ரேல் வீரர்களை ஹெஸ்பொல்லாகொரில்லா படையினர் சிறைப்பிடித்துச் சென்றுவிட்டனர். இதையடுத்து இத்தகையஎச்சரிக்கையை பாரக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது அறிக்கை:
காஸா மற்றும் மேற்குக் கரைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு முழு காரணம்பாலஸ்தீனம்தான். பாலஸ்தீனத்தின் இந் நடவடிக்கைகளுக்கு முழுப் பொறுப்பையும்அதன் தலைவர் யாசர் அராபத்தான் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
தாக்குதலைத் தொடங்கிய பாலஸ்தீனம்தான். அதுவே தாக்குதலை நிறுத்திக்கொள்ளவேண்டும். அதற்காக 48 மணி நேரம் அவகாசத்தை இஸ்ரேல் தருகிறது.
அதற்குப் பிறகும் பாலஸ்தீனம் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் இஸ்ரேல்சும்மா இருக்காது. பாலஸ்தீனத்துடனான அமைதிப் பேச்சு வார்த்தையை முறித்துக்கொண்டு முழுமையான வேகத்தில் தனது நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொள்ளும்என்று பாரக் எச்சரித்துள்ளார்.
இந் நிலையில், இஸ்ரேல் பிரதமரின் எச்சரிக்கைச் செய்தி வெளியான சிறிது நேரத்தில்பாலஸ்தீனிய கொரில்லா படையினர் இஸ்ரேலிய நிலைகள் மீது கடுமையானதாக்குதலைத் நடத்தின.
இதற்கிடையே, தனது எச்சரிக்கை மூலம் பாலஸ்தீனத்தை பிளாக் மெயில் செய்ய பாரக்முயற்சிக்கிறார். மிரட்டல் விடுத்ததன் மூலம் மேற்காசியாவில் அமைதி ஏற்படுவதைத்தடுத்து அங்கு போர் ஏற்படும் சூழ்நிலையை அவர் ஏற்படுத்தியுள்ளார் என்றுபாலஸ்தீனம் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications