ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட்: அரையிறுதியில் நியூசிலாந்து
நைரோபி:
ஐ.சி.சி. நாக்-அஜ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரில் அரையிறுதியில் விளையாடநியூசிலாந்து தகுதி பெற்றது.
திங்கள்கிழமை நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து 64ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே டாஸ் வென்று நியூசிலாந்தைமுதலில் பேட் செய்யும்படி கூறியது.
இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்பியர்மேன், ஆஸ்லே இருவரும்களமிறங்கினார். ஆனால், அணியின் எண்ணிக்கை 4 ஆக இருந்தபோது ரன் ஏதும்எடுக்காத நிலையில் ஆஸ்லே அவுட்டானார்.
ஆஸ்லேவுக்குப் பிறகு அடுத்து ஆட வந்த வீரர்கள் ஓரளவு நின்று ஆடி அணிக்குரன்கள் சேர்த்துக் கொடுத்தனர். இதனால், நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது.
குறிப்பிடும்படியாக ரோஜர் டூஸ் 85 ரன்களும், மேக்மில்லன் 51 ரன்களும் எடுத்தனர்.ஜிம்பாப்வே அணியில் ஹென்றி ஓலங்கா 3 விதகெட்டுகளையும், வில்ஜோயென் இருவிதகெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்து ஆட வந்த ஜிம்பாப்வேக்கும் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.அணியின் எண்ணிக்கை 24 ஆக இருந்தபோது தொடக்க ஆட்டக்காரர் விஷார்ட்அவுட்டானார்.
அடுத்த வந்த வீரர்களும் நின்று ஆடாததால் தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்தபடிஇருந்தது. ஆனால், இரண்டாவது விக்கெட்டுக்கு தொடக்க ஆட்டக்காரர்கேம்ப்பெல்லும், கார்லெஸ்லியும் 62 ரன்கள் சேர்த்தனர்.
கேம்ப்பெல் 47 ரன்களும், கார்லெஸ்லி 67 ரன்களும் எடுத்தனர். அவர்களுக்குஅடுத்தபடியாக 5-வது விக்கெட்டுக்கு விட்டல், ஸ்டிரீக் இருவரும் 46 ரன்கள்சேர்த்தனர்.
மற்றவர்கள் யாரும் குறிப்பிடும்படியாக விளையாடவில்லை. இதையடுத்து 42.2ஓவரில் 201 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழந்தது. இதன் மூலம் 64 ரன்கள்வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணியில் வைஸ்மேன் 4 விக்கெட்டுகளையும், ஆஸ்லே இருவிக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
85 ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் டூஸ் ஆட்ட நாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியை அடுத்து 10-ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில்பாகிஸ்தானை எதிர்த்து நியூசிலாந்து விளையாடும்.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் கடைசி கால் இறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும்அணி 13-ம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவை எதிர்த்துவிளையாடும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications