தமிழ் தடா கைதிகள் விடுதலை வழக்கு: நாளை இறுதி விசாரணை
டெல்லி:
மைசூர் சிறையில் உள்ள தமிழ் தடா கைதிகளை விடுவிக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றத்தில்கர்நாடக அரசு நாளை வாதாட உள்ளது.
புதன்கிழமை (11-ம் தேதி) இந்த வக்கில் இறுதி விசாரணை நடக்கிறது.
இது குறித்து மாநில சட்டத்துறை அமைச்சர் சந்திரே கெளடா கூறுகையில், இவர்களின் விடுதலையில் தான்ராஜ்குமாரின் விடுதலையும் அடங்கியிருக்கிறது. இந்திய குற்றவியல் சட்டத்தின் (சி.ஆர்.பி.சி.) பிரிவு 321-ன் கீழ்தடா கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு.
இதை நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டி எங்களுக்கு ஆதரவான தீர்ப்பைப் பெற்றுவிடலாம் என நம்பிக்கையுடன்உள்ளோம். சிறையில் உள்ள 51 தமிழர்களும் வீரப்பனின் கூட்டாளிகளே அல்ல. அவர்கள் வீரப்பனுக்கு பீடிவாங்கிக் கொடுத்தவர்கள். அவ்வளவு தான் என்றார்.
வீரப்பன் கூட்டாளிகள் என்று கைது செய்யப்பட்ட 121 பேர் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 70 பேர்ஜாமீனில் வந்துவிட்டனர். ஆனால், மீதமுள்ள 51 பேரும் ஜாமீனில் வர பணம் இல்லாததால் கடந்த 7 ஆண்டுகளாகமைசூர் சிறையில் வாடி வருகின்றனர். இவர்கள் மீது இதுவரை விசாரணை கூட நடக்கவில்லை. இவர்களில் 12 பேர்பெண்கள். ஆண்களில் ஒருவருக்கு வயது 71.
இவர்களை விடுவிக்கக் கோரியும், விசாரணை நடத்தி இவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகளா இல்லையா எனமுடிவு செய்யக் கோரியும் பல அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளை கர்நாடக அரசுகள் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.
இப்போது ராஜ்குமாரை கடத்தி வைத்துக் கொண்டு இவர்களை விடுவித்தால் தான் ராஜ்குமாரை விடுவிப்பேன்என்று வீரப்பன் திட்டவட்டமாகக் கூறிவிட்டதால், வேறு வழியின்றி அவர்களை விடுவிக்க கர்நாடகம் முன் வந்தது.
ஆனால், இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. இப்போது, தன்னால் கைது செய்யப்பட்டவர்களைவிடுவிக்கக் கோரி கர்நாடக அரசே நீதிமன்றத்தில் படியேறி போராடி வருகிறது.
இந்த வழக்கில் வழக்கறிஞர்களுக்கு உதவுவதற்காக கர்நாடக சட்ட அமைச்சரும் டெல்லியிலேயே டேராபோட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான வழக்கறிஞர்களையும் அணி வகுத்து நிறுத்தியிருக்கிறது கர்நாடகம்.
முன்பு வீரப்பன் கூட்டாளிகள் என்று கூறி கைது செய்தவர்களை, இப்போது வீரப்பனுக்கு பீடி வாங்கிக் கொடுத்ததுதவிர வேறு எந்தத் தவறும் செய்யாதவர்கள் என்று கூறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது கர்நாடகம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications