மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர் பண்டாரநாயகா

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா, செவ்வாய்க்கிழமைதனது ஓட்டு பதிவு செய்து விட்டு இறந்திருக்கிறார்.

40 ஆண்டுகாலமாக இலங்கை அரசியலில் ஒன்றரக் கலந்தவர். 3 முறை பிரதமராக இருந்தவர். கடைசியாக தனதுமகள் சந்திரிகா குமாரதுங்கா ஜனாதிபதியாக இருக்கையில் தானும் பிரதமராக இருந்து இலங்கையை ஆண்டார்.

சந்திரிகா தவிர்த்து இவருக்கு சுநேத்ரா என்ற மகளும் அனுரா என்ற மகனும் உள்ளனர்.

சமீபத்தில் தனது மகள் சந்திரிகாவுக்கு எழுதிய கடிதத்தில், நான் இந்த பரபரப்பான அரசியலில் இருந்து ஓய்வு பெறவிரும்புகிறேன். எனக்கு அமைதி வேண்டும், முழு அமைதி வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். சொன்னதுமாதிரியே கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

1960ல் பிரதமராக இருந்த தனது கணவர் சோலமன் பண்டாரநாயகா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்துதேர்தலில் போட்டியிட்டு பிரதமரானார் ஸ்ரீமாவோ. தொடர்ந்து பிரதமராக இருந்தார். பல அதிபர்களின் கீழ்பணியாற்றியுள்ளார்.

ஸ்ரீமாவோவை பலரும் பல மாதிரியாக வர்ணித்தது உண்டு. அவர் ஒரு சோசலிசவாதி என்று தொடங்கி அவர் ஒருசிங்கள வெறியர் என்பது வரை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானவர்.

அணி சேரா நாடுகள் அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர். சோசலிசத்தை கொண்டு வருகிறேன்என்று சொல்லி பல தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்கினார். கால்டெக்ஸ், ஷெல் போன்ற சர்வதேசநிறுவனங்களை நாட்டை விட்டு விரட்டினார்.

வெளிநாட்டு உறவுகளில் பெரும் அக்கரை காட்டினார். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்தினார்என்கிறார் ஒரு அரசியல் பார்வையாளர்.

இந்தியாவின் நேரு-இந்திரா-ராஜிவ்-சோனியா பரம்பரை அரசியலுக்கு இணையானது பணடாரநாயகாவின்பரம்பரை அரசியல். ஆனால், ஒரு வித்தியாசம். ஸ்ரீமாவோவின் மகள் சந்திரிகாவும் மகன் அனுராவும் ஒருவர்முகத்தை ஒருவர் கூட பார்ப்பதில்லை. இருவருமே அரசியல்ரீதியில் கடும் எதிரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+