லட்சக்கணக்கில் பண மோசடி செய்தவர் கைது
கோவை:
கேரளாவிற்குச் சென்று கோவையில் வேலை மற்றும் கல்வி ஒதுக்கீடு ஆகிவை வாங்கித்தருவதாக லட்சக் கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தேசிய பஞ்சாலையில்பணியாற்றும் அலுவலரை மத்திய புலானய்வுத் துறையினர் (சி.பி.ஐ) ஈடுபட்டனர்.
கோவையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான பஞ்சாலை (என்.டி.சி) ஒன்றில்பணியாற்றுபவர் அங்கப்பன் (38). இவர் கேரள மாநிலத்திற்கு அடிக்கடி பயணம்மேற்கொண்டு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இவர் கோவையில் உள்ள கல்லூரிகளில் இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் பல்வேறுவகுப்புகளில் இடம் பெற்றுத் தருவதாகக் கூறி வந்துள்ளார். மேலும், கோவையில் வேலைவாய்ப்பு உள்ளதாகவும் கூறி வந்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லா என்ற இடத்தில், விஜூ என்பவரைச் சந்தித்தார்.இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு ஒரு தனியார் கம்பெனியில்பணியாற்றி வருகிறார்.
இவரிடம், அங்கப்பன், கோவையில் தேசிய பஞ்சாலைக் கழகத்தில் துணை மேலாளர்பதவியில் 4 இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. இதற்கு எம்.பி.ஏ படித்த பட்டதாரிகள்தேவை எனக் கூறியுள்ளார். இதற்காக தனக்கு இரண்டு லட்ச ரூபாய் கமிஷன் தர வேண்டும்எனக் கூறியுள்ளார்.
அங்கப்பன் கூறியதை நம்பிய விஜூ, அவரது தம்பி வினோத் குமார் மற்றும் இரண்டு பேர்கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்தனர்.
இந்த ஓட்டலில் வைத்து நான்குபேரும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் முன் பணம்அளித்தனர். செப்டம்பர் முதல் தேதியில் இந்தப் பணத்தை அங்கப்பனுக்கு கொடுத்தனர்.பணத்தைப் பெற்றுக் கொண்ட அங்கப்பன், பெற்றுக் கொண்ட பணத்திற்குப் பதிலாகநண்பர்களிடம் வட்டியில்லாக் கடனாகப் பெற்றுள்ளதாக பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.மீண்டும் செப்டம்பர் 5ம் தேதி சந்திப்பதாகக் கூறி சென்றார்.
பின்னர், கோவை திரும்பிய அங்கப்பன், நான்கு பேருக்கும் செப்டம்பர் 5ம் தேதி போன்செய்து வேலை தயாராகி விட்டது எனவும், மீதபணத்துடன் கோவை வரும்படிகூறியுள்ளார்.
ஆனால் நான்குபேரும் அங்கப்பனின் செயலில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே, தங்களால்கோவைக்கு பணத்துடன் வர இயலாது. நீங்கள் நேரில் வந்தால் பெற்றுக் கொள்ளலாம்எனக் கூறியுள்ளனர். இதையடுத்து அங்கப்பன், கேரளா சென்றார்.
அங்கு நால்வரையும் சந்தித்துள்ளார். அப்போது விஜூ, சி.பி.ஐ. அதிகாரிகளுக்குத் தகவல்கொடுததார். போலீஸார் அங்கப்பனைப் பிடிக்க வலை விரித்தனர். அங்கப்பனைகுருவாயூரில் சந்தித்து பணம் கொடுப்பதாக நான்கு பேரும் தெரிவித்தனர். இதையடுத்துஅங்கப்பன் குருவாயூர் சென்றார்.
அங்கு வைத்து அங்கப்பனிடம் அவர்கள் பணத்தைக் கொடுத்தனர்.அப்போதுமறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கப்பனைக் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், இதுபோல மேலும் பல இடங்களில் லட்சக்கணக்கானரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications