சுப்ரீம் கோர்ட்டில் குண்டு வீசிய மனநோயாளி
டெல்லி:
சுப்ரீம் கோர்ட்டில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிய வந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் அருகேயுள்ள பகவான்தாஸ் சாலையில் செவ்வாய்க்கிழமை காலை வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பாதுகாவலர்கள், ஒரு பழ வியாபாரிஆகியோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் உபேந்திர குமார் மொகந்தி. வயது 50. ஒரிசா மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தைச்சேர்ந்தவர். இவர் பல குற்றங்கள் புரிந்தது தொடர்பாக 3 முறை ஜெயிலுக்குச் சென்று விடுதலையானவர். இப்போது சுப்ரீம் கோர்ட் அருகே இவர் வீசியகுண்டுகள் நாட்டு வெடிகுண்டுகள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ரவீந்தர் ராஜ் கூறுகையில், சந்தேகப்படும்படியான விதத்தில் உபேந்திரா சுப்ரீம் கோர்ட்டை நோக்கி வந்துகொண்டிருந்தார். நான் அவருக்கு 20 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்தேன்.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் சட்டென்று தன் கைப்பையிலிருந்த குண்டை எடுத்து, சுப்ரீம்கோர்ட்டின் முக்கிய நுழைவாயில் நோக்கி வீசி விட்டார்.அவர் தப்பித்துச் செல்லுமுன், அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர் என்றார்.
இதுகுறித்து டெல்லி இணை போலீஸ் கமிஷனர் சுரேஷ் ராய் கூறுகையில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட உபேந்திரா மிகவும்அபாயகரமான, மனநோயாளி போல் காணப்படுகிறார். அவரை நாங்கள் வெடிப்பொருட்கள் தடுப்புச் சட்டம் மற்றும் கொலை முயற்சி ஆகியசட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளோம்.
சுப்ரீம் கோர்ட்டில் குண்டு வீசுவதற்கு முன்பு அவர் ஒரிசா அரசை அணுகியுள்ளார். இந்திய சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் தீய சக்திகளை ஒழிப்பதற்காக 60,000 ராணுவ வீரர்களை தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால், ஒரிசா அரசு இதற்கு அனுமதி மறுத்து விட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாகஇந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக, அவர் கடந்த 24 ம் தேதி ஒரிசாவிலிருந்து, டெல்லிக்கு வந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யை சந்தித்து தனக்கு நீதிவேண்டும் என்றுகேட்க முயன்றார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட் பாதுகாவலர்கள் கோர்ட்டுக்குள் விடவில்லை. தன்னை கோர்ட்டுக்குள் விட மறுத்தபாதுகாவலர்களைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என்ற முடிவில்தான் அவர் இந்த குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டில் நுழைய அனுமதி மறுத்ததால் கோபமடைந்த அவர் ஒரிசாவுக்குத் திரும்பிச் சென்று நாட்டு வெடிகுண்டுகளை எடுத்துக் கொண்டுசெவ்வாய்க்கிழமை காலை புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லிக்கு வந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
உபேந்திராவைக் நாங்கள் கைது செய்த போது அவர் ஜெய்ஹிந்த் என்று எங்களை நோக்கி சல்யூட் அடித்தார். சட்டையில் மூன்று தேசியக் கொடிகளையும்வைத்திருந்தார்.
அவரது பையில் பிரேம் செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் போட்டோவை வைத்திருந்தார். தனது பாட்டி சொத்தைப் பிரித்துத் தராத காரணத்தால் அவரைதாக்கி முதல்முறையாக ஜெயிலுக்குச் சென்றுள்ளார். பின்னர் ஒரிசாவில் மாஜிஸ்ட்ரேட் ஒருவரையும், போலீஸ்காரர் ஒருவரையும் தாக்கியுள்ளார். சுமார்25 வருடங்களுக்கு மேல் ஜெயில் தண்டனை அனுபவித்துள்ளார் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications