நெடுமாறனுடன் காட்டுக்குச் சென்றார் கோபால்
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் மற்றும் 2 பேருடன் நக்கீரன் கோபால் செவ்வாய்க்கிழமைசத்தியமங்கலம் காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
நடிகர் ராஜ்குமாரும், அவரது உறவினர்கள் 3 பேரும் கடந்த ஜூலை மாதம் 30 ம் தேதி வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டனர். இந்த நான்கு பேரையும்மீட்பதற்காக அரசுத்தூதர் கோபால் நான்கு முறை காட்டுக்குச் சென்றார்.
அவர் நான்காவது முறை பிணைக்கைதிகளை மீட்டு வரும் முயற்சியுடன் அவர் காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றபோது, ராஜ்குமாரின் உதவியாளரும், உதவிடைரக்டருமான நாகப்பா, வீரப்பன் பிடியிலிருந்து தப்பித்து வந்து விட்டார். இதைத்தொடர்ந்து கோபால் வெறுங்கையுடன் திரும்பினார். ஆனாலும் அரசுஅழைத்தால் 5 வது முறையும் காட்டுக்குச் செல்லத் தயார் என்று அறிவித்திருந்தார்.
இதற்கிடையே தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனுக்கு கேசட் மூலம் வீரப்பன் அழைப்புவிடுத்திருந்தான். இதனால், ராஜ்குமாரை விரைவில் விடுவிப்பதற்காக கோபாலுடன், நெடுமாறனையும் சேர்த்து அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டது.ஏற்கனவே காட்டுக்குச் சென்று வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசுத்தூதர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டது. அவரை மாற்றுவதென்பதுநாகரீகமானதல்ல. அதனால் கோபாலுடன், நெடுமாறனையும் காட்டுக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை நெடுமாறன், விழுப்புரத்தைச் சேர்ந்த பேராசிரியர் கல்யாணி, மக்கள் சிவில் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த புதுவைசுகுமாரன் மற்றும் நக்கீரன் கோபால் ஆகியோர் காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
கோபாலுடன் செல்லும் புதிய குழு குறித்து திங்கள்கிழமை இரவு சென்னையில் நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது. அவர்களிடம்ராஜ்குமார் விடுதலைக்குத் தேவையான அனைத்து தஸ்தாவேஜுகளும் கொடுக்கப்பட்டன. இந்த புதிய குழுவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதியும் சம்மதம்தெரிவித்தார்.
முன்னதாக, இதுகுறித்து பெங்களூரில் கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், அரசுத் தூதருடன் வேறு ஒருவரையும்காட்டுக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தடா கைதிகள் வழக்கு விடுதலை விசாரணைக்கு வருகிறது. சாதகமான தீர்ப்பு கிடைத்தால்பிணைக்கைதிகளை எளிதில் மீட்டு வந்து விடலாம் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications