ஒரே நேரத்தில் பதவிகள்...ஒரே நேரத்தில் ஜெயில்...
சென்னை:
ஒரே காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ஒரே நேரத்தில்ஜெயிலுக்குப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இருவருமே தண்டனைக்குரிய குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை மத்தியில் பிரதமர் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது.அதே காலக்கட்டத்தில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்றது.
மத்தியில் ஊழலுக்கு இலக்கணமே எழுதினார் நரசிம்மராவ். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள எம்.பிக்களை ஆடு-மாடு ரேஞ்சில்விலை பேசி வாங்கினார். இதை பத்திரிக்கைகளும், எதிர்க் கட்சியினரும் சுட்டிக் காட்டியபோதெல்லாம் பேசமலேயே இருந்தார்.
மத்தியில் பிரதமரே ஜனநாயக மோசடி செயல்களில் இறங்கியதால் மாநில அரசுகளின் ஊழல்களை அவர் கண்டுகொள்ளவேஇல்லை. அதுவும் கூட்டணிக் கட்சியான அதிமுக அரசின் முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் அமைதி காத்தார். அதேநேரத்தில் அரசியல்ரீதியில் ஜெயலலிதாவை மிரட்ட சுப்பிரமணியம சுவாமிக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்தில் ஒரு பதவியைக்கொடுத்து அவர் மூலம் ஜெயலலிதாவுக்கு பிரச்சனைகளைத் தந்து வந்தார்.
அடுத்து வந்த 1996ம் ஆண்டு தேர்தலில் நரசிம்மராவ்-ஜெயலலிதா கூட்டணி மண்ணைக் கவ்வியது. இந்த இரு தலைவர்களுமேதோற்கடிக்கப்பட்டு ஆட்சியை இழந்தனர். இதையடுத்து நரசிம்மராவ் ஊழல் வழக்குகளில் வசமாக சிக்கினார். நீதிமன்றத்தால்குற்றம் சாட்டப்பட்ட முதல் முன்னாள் பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.
அதேபோல் தமிழகத்தில் ஜெயலலிதாவும் ஊழல் குற்றச்சாட்டுகளில் வசமாக மாட்டிக் கொண்டார். அவர் கைது செய்யப்பட்டுசிறையில் 28 நாட்கள் வைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு பொது மக்களிடையே அனுதாபம்கிடைக்க ஆரம்பித்ததையடுத்து அவரை விடுதலை செய்ய திமுக அரசு முடிவெடுத்தது.
இதையடுத்து விடுதலையாகி வீடு திரும்பினார் ஜெயலலிதா.
இப்போது டான்சி நிலபேர வழக்கில் குற்றவாளி என்று தனி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றுள்ளார்.
நரசிம்மராவும் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக எம்.பி.க்களை விலை கொடுத்து வாங்கிய வழக்கில் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, தண்டனைக்காக காத்திருக்கிறார்.
நாளை (11ம் தேதி) அவருக்கு 3 ஆண்டு சிறையா அல்லது 5 ஆண்டு சிறையா என்ற விவரம் தெளிவாக அறிவிக்கப்பட்டு விடும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications