ராமதாசுக்கு ரூ.2.5 கோடி கொடுத்தேன் .. வாழப்பாடி "திடுக் தகவல்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்னிடம் இரண்டரை கோடி வாங்கினார் என்று புதுகுற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி.
பரபரப்பூட்டும் இந்தப் புகாரைக் கூறியுள்ள வாழப்பாடி ராமமூர்த்தி, சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டிவிவரம்:
பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் என்னை குறை கூறி வருகிறார். முதல்வர் கருணாநிதி தூண்டுதலால் தான் நான்பேசுவதாக குற்றம் சாட்டுகிறார். நான் சுயமாக செயல்படுகிறேன். என்னை யாரும் தூண்டி விட முடியாது.
கடந்த தேர்தலின்போது எங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறி எங்கள் கட்சிப் பணத்தில் இருந்து ரூ.இரண்டரை கோடி வாங்கினார். இனி சமாதானம் ஆக வேண்டுமானால் அந்த பணத்தை அவர் திருப்பித் தரவேண்டும்.
எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவை கைப்பற்றிய ஜெயலலிதா, சசிகலா குடும்பத்தாரால் இந்த நிலைக்கு ஆளாகிஇருக்கிறார். அதிமுக அமைச்சர்கள் ஒவ்வொருவராக தண்டனை பெற்றதும் சசிகலா குடும்பத்தால் தான். இத்தனைநெருக்கடியிலும் ஜெயலலிதா, சசிகலாவுக்கு கட்சி பதவி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே கட்சியில் உள்ள மூத்ததலைவர்களை நீக்கி விட்டார்.
ஜெயலலிதாவும் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே தற்போது அதிமுகவில் தினகரனும், சசிகலாகுடும்பத்தினரும் தான் மூத்த தலைவர்களாக உள்ளனர். ஜெயலலிதாவின் கடைக் கண் பார்வை பட வேண்டும்என்பதற்காக அந்த கட்சியை சேர்ந்த சிலர் மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். இதுநீதிமன்ற கண்டனத்துக்கு உள்ளாவது மட்டுமல்ல. நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.
இந்த தீர்ப்பு மூலம் வருகிற தேர்தலில் தமிழக அரசியலில் திருப்பு முனை ஏற்படும். அதிமுக படுதோல்விஅடையும். திமுக அமோக வெற்றி பெறும் என்றார் வாழப்பாடி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications